ஹே மின்னலே அமரன் பட முதல் பாடலின் ரிலீஸ் தேதி அறிவித்தது படக்குழு

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடையே உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4 வெளியிடப்போவதாகவும் ஜீவிப்ரகாஷ் இசையமைக்க இப்பாடல் மின்னலே என்னும் வரிகளில் உருவாகியுள்ளது. ஜீவிப்ரகாஷின் 700 வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் சிவகார்த்திகேயனின் 21வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. SK21 என இப்படம் ஆரம்பிக்கப்பட்டது. 2022 இப்படம் திட்டமிடப்பட்டு பின்பு SK21 என அறிவித்தது படக்குழு. பின்பு அமரன் என பெயர் வைத்து வரும் தீபாவளி அன்று இப்படம் திரையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் நமது ராணுவத்தின் அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகிறது. நம் ராணுவ அதிகாரிகளுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கும் வண்ணம் இப்படம் அமைந்திருக்கிறது. சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படம் சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15 திரையிட ஆலோசனை நடந்த சூழ்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Ad