மீண்டும் ''ஹலமத்தி ஹபிபோ'' பீஸ்ட் காம்போ! விஜயுடன் இணைந்த பூஜா ஹெக்டே - தளபதி 69 அப்டேட்

                    ''கோட்'' படத்தை தொடர்ந்து ஹெச்.விநோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் சூட்டிங் அக்.5 தொடங்கியது. முதலில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியை எடுக்க பிரமாண்ட செட் போட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. மேலும், கங்குவா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

                     தீவிரமாக அரசியலில் ஈடுபடும் முன்பாக நடிகர் விஜய் ஹெச்.விநோத் இயக்கத்தில் ''தளபதி 69'' படத்தில் நடிக்கிறார். சினிமா பயணத்தில் விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், செப்டம்பர் 14ம் தேதி படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது. அதில் ஜனநாயகத்தின் விடிவெள்ளி என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. 250 கோடி சம்பளம் பெரும் முதல் இந்திய நடிகர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் பட பாடல் ஸ்டில்
அடிப்படையில் இது அரசியல் படமா? என ஹெச்.வினோத்திடம் கேட்கப்பட்டதற்கு மக்களுக்கு தேவையான விஷயங்களை கமர்ஷியலாக சொல்லும் படமாக ''தளபதி 69'' இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்துல ஹீரோயின் ஆக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே, விஜய்-பூஜா ஹெக்டே கம்போவில் வெளியான ''பீஸ்ட்'' திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடப்பட்டது. 

இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad