விக்கிரவாண்டி த.வெ.க., மாநாட்டிற்கு வந்த 4 பேர் உயிரிழப்பு
உளுந்துார்பேட்டை அருகே த.வெ.க., மாநாட்டிற்கு சென்ற கார் கவிழ்ந்ததில், திருச்சி இளைஞரணி மாவட்ட தலைவர், துணைத் தலைவர் இறந்தனர்.
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சீனிவாசன். இவர் திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க., இளைஞரணி தலைவர். இவரது தலைமையில் ஏழு பேர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த மாநில மாநாட்டில் பங்கேற்க, காரில் வந்து கொண்டிருந்தனர்.
திருச்சி, பெரியசெட்டி தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஜய், காரை ஓட்டினார். மதியம் 12:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரின் பின் வலதுபக்க டயர் வெடித்தது.
அதில், கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த நாவல் மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கலைக்கோவன் ஆகியோர் இறந்தனர்.