சிறப்பாக சமைத்து தரப்படும்! - ஆர்.ஜே. பாலாஜியின் ''சூர்யா 45'' அப்டேட்
சில நாட்களுக்கு முன்பு நடந்த கங்குவா ஆடியோ வெளியீட்டில், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி ''சூர்யா 45'' குறித்த செய்தியை ரசிகர்களுக்கு அப்டேட் செய்துள்ளார்.
பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ''கங்குவா'' திரைப்படம், நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ''கங்குவா'' பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. சூர்யா, சிவகுமார், கார்த்தி, திஷா பட்டாணி, ஆர்,ஜே.பாலாஜி போன்ற பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ''சூர்யா 45'' பட இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, சூர்யா 45 திரைப்படம் சிறப்பாக சமைத்து தரப்படும் என பேசியுள்ளார்.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.