ஹிருத்திக் ரோஷனுடன் மோதும் ஜுனியர் என்.டி.ஆர் - ''வார் 2'' அப்டேட்
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளியான வார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார். வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார். வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நவம்பர் இறுதியில் ஹிருத்திக் ரோஷன்-ஜுனியர் என்.டி.ஆர் இடையே ஆன கிளைமாக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக காட்சியமைக்கப்பட இருக்கிறது. மும்பையில் 20 நாட்கள் தொடங்கி பிற இடங்களிலும் ஷூட் செய்ய இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும், இது இதுவரை இல்லாத அளவிற்கும் மிகச்சிறந்த ஆக்சன் க்ளைமாக்ஸ் ஆக இருக்கும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.