''புஷ்பா 2''-வில் ஷ்ரத்தா கபூர்? அப்போ சமந்தா?

               அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகும் ''புஷ்பா 2'' திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையே மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகின்றன. டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வணிகம் மட்டுமே சுமார் ரூ.650 கோடியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனுடன் சமந்தா ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் ஹிட் ஆகியது. மேலும் அதுவே படத்திற்கும் பெரும் ப்ரோமோஷன் ஆக மாறியது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புஷ்பா படம் வட இந்தியாவில் வெற்றி பெற்றதால், அங்கேயும் புஷ்பா 2 -விற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


மாடல் மற்றும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் சிறப்புப் பாடலில் நடிப்பதாக வதந்திகள் முதலில் பரவின, அதை படக்குழு மறுத்தது. தற்போது பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ''புஷ்பா 2'' படத்தில் சிறப்புப் பாடலில் நடிக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷ்ரத்தா கபூர் ஏற்கனவே பிரபாஸின் ''சாஹோ'' படத்தில் நடித்திருந்தார். இது உண்மையானால், வட இந்தியாவில் ''புஷ்பா 2'' படத்திற்கு மேலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ''புஷ்பா 2''-வின் டீசர் மற்றும் இரண்டு பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad