ராகவா லாரன்ஸ் 25வது படம்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!
நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்களின் 25வது படம் குறித்த டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரை உலகின் பிரபல நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ’துர்கா’, ’அதிகாரம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 25வது படம் என்ற மைல்கல்லை அடைந்திருக்கும் ராகவா லாரன்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் தனது 25வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிட்டிருந்தார். மிகப்பெரிய ஆக்சன் படம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் 25வது படம் வெற்றி பெற அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.