24 வருடத்துக்கு பின் சினேகிதனை சந்தித்த ஷாலினி அஜித்!!

          நடிகை ஷாலினி, அலைபாயுதே படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் மாதவனை 24 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோஸ் இப்பொது வைரலாகி வருகிறது.

2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம் ஷாலினியின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகும். தமிழ் திரையுலகில் காதல் படம் எடுக்கும் பலருக்கும் அப்படம் ஒரு முன்னோடியாக இன்றளவும் இருந்து வருகிறது. அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.

அலைப்பாயுதே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது ஷாலினி - மாதவன் இடையேயான கெமிஸ்ட்ரி தான். அப்படத்தின் அவர்கள் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த ஜோடி அதன் பின் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா? என ஏங்கும் அளவுக்கு அவர்களின் நடிப்பு இருந்தது. இந்த நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாலினியும் மாதவனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது மாதவன் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவர்கிரீன் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url