15 நாட்கள் பூட்டிய அறையில் உருவான கதை - இயக்குனர் சேரனின் மலரும் நினைவுகள்!
இயக்குனர் சேரன் சமீபத்தில் ''வெற்றிக் கொடி கட்டு'' திரைப்படத்தை பற்றி மலரும் நினைவை வெளிப்படுத்தி உள்ளார்.
2000ல் வெளிவந்த ''வெற்றிக் கொடி கட்டு'' திரைப்படம், சேரன் இயக்கத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகா நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா அமைத்திருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் சேரன், ஒரு கதையை ரசிகர்களுக்காக சொல்லி இருக்கீரார்.
15 நாட்கள் ஒரு தனி அறையில் கதவை கூட திறக்காமல்...ஜெயில் வாழ்கை போல உலகின் வெளிச்சத்தை கூட பார்க்காமல் நடிகர் பார்த்திபனின் கட்டாயத்தால் உருவான கதை தான் வெற்றிக் கொடி கட்டு! என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை ''வெற்றிக் கொடி கட்டு'' திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடப்பதது.