வாரிசு திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை இன்னும் இறுதியாகவில்லை விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வெளியீட்டுக்கான விநியோக வியாபாரம் இன்னும் இறுதியாகவில்லை.
வாரிசு திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை இன்னும் இறுதியாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் 60 கோடி அளவிலேயே ஷேர் தொகை வசூலித்தது. தயாரிப்பாளர் தில் ராஜு 80 கோடி ரூபாய் விலை கூறுகிறார். இதனால் வாரிசு 80 கோடி கொடுத்து வாங்க இங்குள்ள விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் தமிழகத்தில் உள்ள விநியோக ஏரியாவிற்கு தனி தனியே விற்பனை செய்யலாமா என தயாரிப்பாளர் தில்ராஜு யோசித்து வருகிறார். இதனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதை தவிர மற்ற உரிமைகளை நல்ல விலைக்கு வியாபாரம் செய்துள்ளார் தில்ராஜு.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது.