இவ்வளவு தான் விலையா !!!! MonsterShot Samsung Galaxy M31s மொபைல் அறிமுகமானது !!!



நீண்ட அறிவிப்பிற்குப் பிறகு Samsung நிறுவனம் தனது புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. #MonsterShot Samsung Galaxy M31s மொபைல்தான் அது. இந்த மொபைலும் ஒரு சிறந்த பட்ஜெட் மொபைல் தான். Galaxy M31s மொபைல் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான ஸ்மார்ட் போன். இந்த மொபைலின் 64MP Intelli-Cam உடனான Single Take feature நிச்சயம் அனைவரையும் கவரும். ஒரே கிளிக்கில் 7 போட்டோஸ்களையும் 3 வீடியோக்களையும் எடுக்க முடியும். மேலும், AI தரும் Smart crop, Filters, Best moments என அனைத்தும் உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான Samsung's Monster மொபைலின் விலை ரூ.19,499 மட்டுமே.

Galaxy M31s மொபைலின் மான்ஸ்டர் திரை, சக்திவாய்ந்த quad-camera அமைப்பு போன்றவை எல்லாம் சேர்ந்து, #MonsterShot என்ற பெயருக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மொபைலில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Samsung Galaxy M31s : கேமரா



பல ஆண்டுகளாக ஒரு பட்ஜெட் மொபைலில் அட்டகாசமான கேமரா அமைப்புகளைக் காண முடியாது. ஆனால், Galaxy M சீரிஸ் வகை மொபைல்களை இதனை மாற்றியுள்ளது. இந்த Galaxy M31s மொபைல் போட்டோஸ்களை எடுப்பதற்கான புதிய அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இந்த quat-camera அமைப்பு கொண்ட மொபைலில் 64MP Intelli-Cam உள்ளது. Sony IMX682 சென்சார், 12MP UltraWide லென்ஸைக் கொண்டுள்ளது. மேலும், ஒரு தனி 5MP டெப்த் சென்சார் சிறப்பான பொக்கே ஷாட்களை எடுக்கவும் மற்றும் குறைந்த தூரத்தில் உள்ளவற்றை படம் பிடிக்க உதவும் 5MP மேக்ரோ லென்ஸையும் கொண்டுள்ளது. சூப்பரான செல்ஃபி எடுக்க வசதியாக இந்த மொபைல் 32MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

Galaxy M31s மொபைலின் பிரம்மாண்ட அம்சம் என்னவென்றால், அதன் 64MP Intelli-Cam உடனான Single Take அம்சம் தான். Single Take மூலம் ஒரே கிளிக்கில் 10 போட்டோஸ் & வீடியோக்களை எடுக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது கேமராவை திறந்து Single Take விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் அவ்வளவுதான். இதன் மூலம் 7 போட்டோஸ் கிடைக்கும், அதில் 3 Best moments, 2 AI Smart crop, 2 filters. வீடியோ பொறுத்தவரையில் 64MP Intelli-Cam எடுக்கும் Origial Shot, Fast-forward video மற்றும் Boomerang வீடியோ கிடைக்கும்.

ஒரு போட்டோ அழகாகவோ அல்லது வீடியோவாகவோ இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாத போது, Single Take-ன் 64MP Intelli-Cam போன்ற அம்சத்தின் மூலம் Single Take-ல் 10 போட்டோஸ் வீடியோக்களை எடுக்கலாம்.



இந்தியாவின் முன்னணியில் உள்ள 64MP Intelli-Cam சென்சார் Single Take-ஐ விட அதிகமாகச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.உங்களால் UHD (4K), Super Slo-mo, Hyperlapse போன்ற வீடியோக்களை ஷூட் செய்ய முடியும். குறிப்பாக உங்களால் இரவில் கூட வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். 64MP Nudge, My filters (Customized filters) மூலம் உடனடி வீடிக்களை உருவாக்க முடியும். இந்த மொபைலின் குறைந்த aperture மூலம் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல போட்டோக்களை எடுக்க முடியும். எனவே இந்த மொபைல் Night Photographyக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது செல்ஃபிக்களுக்காக, 32MP சென்சார் கேமராவுடன் f/2.0 aperture கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களை மட்டுமல்லாமல், slow-fies - Front Slow-Motion வீடியோவையும் எடுக்க உதவுகிறது. இந்த கேமரா 4K வீடியோவை எடுக்க உதவுவதுடன், AR Doodle & AR Emoji-யையும் ஆதரிக்கிறது.

Samsung Galaxy M31s : டிஸ்பிளே



Samsung ஸ்மார் போன்கள் எப்போதுமே சிறப்பான டிஸ்பிளே காட்சியமைப்புகளை கொண்டுள்ளது. Samsung-ன் sAMOLED பேனல்கள் ஏற்கனவே ஸ்மார்ட்போன் உலகில் பிரபலமாக உள்ளது. மேலும் அதன் தரத்திற்கும் எந்த குறைவேதும்மில்லை. அதனால்தான், Galaxy M31s மொபைலின் தரமான காட்சியமைப்பு மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. Galaxy M31s மொபைல் 6.5-inch FHD+ Super AMOLED Infinity-O Display panel. இந்த முழு அம்சமும் சிறப்பான பார்வை அனுபவத்திற்கு ஏற்றது. இந்த மொபைல் வெளிப்புற பயன்பாட்டிற்கும் ஏற்றது. ஏனெனில் இதன் பிரகாசமான ஸ்கீரீன் 420 Nits.

மொபைலில் சீரியல், பாடல் வீடியோக்கள் பார்ப்பவர்களா நீங்கள்... அப்படியெனில் Galaxy M31s மொபைல் உங்களுக்கானது. HD அனுபவத்துடன் இந்த மொபைல் Widevine L1 Certification பெற்றது. இது, Amazon prime video மற்றும் Netflix ஆகியவற்றிலிருந்து HD ஸ்ட்ரீமிங்கைப் பெற அனுமதிக்கிறது. மொபைலில் கீறல்களிலிருந்து பாதுகாக்க இது Corning Gorilla Glass 3-ஐக் கொண்டுள்ளது.

Samsung Galaxy M31s : பேட்டரி



Samsung Galaxy M சீரிஸ் ஸ்மார்போன் அதன் அதிக திறன் கொண்ட பேட்டரிக்கு பெயர்பெற்றது. Galaxy M31s-ம் 6000mAh battery உடன் வருகிறது. இந்த மொபைலை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால் நீங்கள் சில நாட்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த மொபைல் விரைவான சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இப்போது வரை M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 15W திறன் கொண்ட வேகமான சார்ஜருடன் வந்துள்ளன. ஆனால், Galaxy M31s மொபைல் 25W USB Type C Fast Charger உடன் வருகிறது.

Samsung Galaxy M31s : Internals

Samsung Galasy M31s மொபைலில் Exynos 9611 பிராசசர் உள்ளது. இதில், பெரிய பெரிய கேமிங் ஆப்களையும் எளிதாக பயன்படுத்தலாம். இதன் பிராசசர் 2.3GHz வரையிலான 10nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. Galaxy M31s மொபைல் கேமிங்கிற்காக Mali G72 MP3 GPU கொண்டுள்ளது. இது, கேமிங் கிராபிக்ஸ் பயன்பாட்டை வேகமாக மாற்றும் LPDDR4x RAM-ஐ கொண்டுள்ளது. பல்வேறு பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் RAM+ROM அமைப்புகளில் 6GB+128GB மற்றும் 8GB+128GB வெளிவருகிறது. இந்த Galaxy M31s மொபைலை Fast Face Unlock மற்றும் Side fingerprint feature மூலமும் உடனடியாக திறக்கும் வசதி கொண்டுள்ளது.

அற்புதமான டிசைன், சக்திவாய்ந்த பேட்டரி, அட்டகாசமான கேமரா என பல சிறப்புகளைக் கொண்டுள்ள Galaxy M31s மொபைல் பட்ஜெட் சாம்பியன் என்பதில் தவறேதும் இல்லை. இந்த மொபைல் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. Amazon.in மற்றும் Samsung.com வலைத்தளங்களில் மொபைலை ஆர்டர் செய்யலாம். இந்த Samsung Galaxy M31s மொபைல் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களைப் படம் பிடிக்க வரும்பும் அனைவருக்கும் ஏற்றது.

குறிப்பு: இது டைம்ஸ் இன்டர்நெட்டின் ஸ்பாட்லைட் குழுவினரால் வெளியிடப்பட்ட ஒரு பிராண்ட் பதிவு.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad