அமேசானில் ஆஃபர் மழை !!!!! என்னென்ன சலுகைகள் உள்ளது என தெரியுமா ?!!!!



அமேசான் பிரைம் டே 2020 மற்றும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை நேற்று நள்ளிரவில் தொடங்கியது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை இரண்டும் ஏராளமான மொபைல் போன்களின் மீதான சலுகைகளை பட்டியலிட்டுள்ளன.

அப்படியாக இந்த அமேசான் சிறப்பு விற்பனை நேரலைக்கு வரும்போது பயனர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றிய தொகுப்பே இது.

இந்த விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, அமேசான் மொபைல் போன்களின் மீதான மிகப் பெரிய சலுகைகளை டீஸ் செய்யத் தொடங்கியது. பிரைம் டே 2020 விற்பனையின் போது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசானின் டீஸர் பக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விற்பனையில் நோ காஸ்ட் EMI சலுகைகள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் தொகுக்கப்பட்ட பிற கட்டண சலுகைகளும் கிடைக்கும்.



அமேசானின் பிரைம் டே 2020 விற்பனையின் போது ஐபோன் 11, ஒன்பிளஸ் 7 டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடிகள் மற்றும் தொகுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். இதில் வழக்கமான தள்ளுபடிகள் மற்றும் லைட்னிங் ஒப்பந்தங்கள் எனப்படும் வரையறுக்கப்பட்ட கால ஃபிளாஷ் விற்பனை ஆகியவைகளும் அடங்கும்.

இந்த அமேசானின் பிரைம் டே 2020 விற்பனையின் போது தள்ளுபடி பெறும் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி எம் 21, ஒப்போ ஏ 5 2020, சாம்சங் கேலக்ஸி எம் 11 மற்றும் ரெட்மி நோட் 8 ஆகியவைகளும் அடங்கும்.

இவைகளை தவிர, விவோ வி 17, விவோ வி 19, ஒப்போ எஃப் 15, ஒப்போ ஏ 52, கேலக்ஸி ஏ 31, விவோ எஸ் 1 ப்ரோ, மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ 51 உள்ளிட்ட பல இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடிகள் மற்றும் தொகுக்கப்பட்ட சலுகைகளுடன் விற்கப்படும்.

தவிர இந்த பிரைம் டே விற்பனையில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.71,000 ஆகும், இதே போல ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெறும் ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.53,999 ஆகும்.

மேலும் சியோமியின் மி 10 ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,000 என்கிற எக்ஸ்சேன்ஞ் சலுகையும் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பங்களும் கிடைக்கும்.

இந்த வாரம் இந்தியாவில் நடக்கும் அமேசானின் பிரைம் டே 2020 விற்பனையின் போது ஐபோன் 8 பிளஸ் ரூ.40,900 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.77,560 ஆகும். இதேபோல எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.70,000 ஆகும். கடைசியாக சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.45,000 ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad