தமிழ்நாட்டில் இ-பாஸ் எப்போது வரை இருக்கும் என்பது தெரியுமா ???!!!....
பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இ பாஸ் நடைமுறை, பொது போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டாலும், அதில் பணியாற்றுபவர்களும், வாடிக்கையாளர்களும் எளிதில் சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசிடமிருந்து இது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இது குறித்து பேசியுள்ளார்.
கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று சென்னை மறைமலை நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இ பாஸ் முறையை ரத்து செய்ய எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட போது, “இ பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ பாஸ் நடைமுறை தொடரும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் மத்தியில் முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் காரணத்தினால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீடுகளுக்கே சென்று அரசால் வழங்கப்படும் முகக் கவசங்களை கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களைத் தீவிரமாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்புக் குழுக்களை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.