வளரும் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டேட்ஸ் ப்யூரி வீட்டிலேயே செய்வது எப்படி ????



வளரும் பிள்ளைகளுக்கு அனைத்துவித சுவையையும் பழகுவதில் அம்மாக்களுக்கு சவால் தான். இனிப்பு நிறைந்த உணவை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்க்க கூடாது. அதற்கு மாற்றாக சேர்க்க வேண்டிய இனிப்பில் டேட்ஸ் ப்யூரியும் ஒன்று.

இதை சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கு முறை குறித்து பார்க்கலாம். இதன் மூலம் பிள்ளைகளுக்கு வேண்டிய சத்தும் நிறைவாகவே கிடைத்துவிடும். எளிமையான இந்த தயாரிப்பு நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

​தயாரிக்கும் முறை:

தரமான பேரீச்சம்பழம் - 20 கிராம் அளவு

தண்ணீர் - தேவைக்கேற்ப

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். அகலமான அடிகனமான பாத்திரத்தில் அதை சேர்த்து, அவை மூழ்கும் அளவு இலேசான தண்ணீர்விட்டு மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.

பிறகு ஆறியதும், மிக்ஸியில் அந்த நீருடனே அரைத்து மசித்து வைக்கவும். பேரீச்சம்பழத் துண்டுகள் இல்லாமல் மசிய அரைக்க வேண்டும். இதை கண்ணாடி பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

​எப்படி சாப்பிடுவது:

வளரும் பிள்ளைகளுக்கு எனர்ஜி தரும் டேட்ஸ் ப்யூரியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். தோசைக்கு சர்க்கரையை தொட்டு கொள்ள விரும்பும் பிள்ளைகளுக்கு தொட்டு கொள்ள இதை கொடுக்கலாம். சப்பாத்தியின் உள்ளே இதை வைத்து ஸ்டஃப்டு செய்து கொடுக்கலாம். பூரிக்கு தொட்டு கொள்ள கொடுக்கலாம்.

பிரட் டோஸ்ட் நடுவில் தடவி கொடுக்கலாம். இனிப்பு சேர்க்கவேண்டிய சாலட் வகைகளிலும் டேட்ஸ் ப்யூரி கலந்து கொடுக்கலாம். யோகர்ட் விரும்பும் பிள்ளைகளுக்கு இதிலும் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் பெறூம் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

​மலச்சிக்கல் வராமல் தடுக்கும்:

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சை சிறந்த மலமிளக்கி என்று சொல்லலாம். கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளுடன் அமினோ அமிலங்களும் உள்ளதால் செரிமான மண்டலத்தின் பணீயை ஊக்குவிக்கிறது குடல் இயக்கங்களை சீராக்குவதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. அஜீரணக்கோளாறும் வராமல் தடுக்கப்படுகிறது.

வளரும் பிள்ளைகள் துரித உணவுகளை அதிகம் பழகும் போது மலச்சிக்கல் பிரச்சனை உள்ளாவது இயல்பு. அதை தவிர்க்க உணவில் இனிப்புக்கு மாற்றாக இதை சேர்க்கலாம்.

​இரும்புச்சத்து கூடும்:

பேரீச்சையில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைவாக உள்ளன. இரும்புச்சத்து குறைபாடு வராமல் பாதுகாக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது என்பதால் பிள்ளைகள் எப்போதும் சுறுசுறுப்பாக வளைய வருவார்கள். ரத்த உற்பத்தி தடையில்லாமல் இருக்கும்.

நிறைவான இரும்புச்சத்து இருந்தால் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கலாம். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்தாலே ரத்த சோகை வராமல் தடுத்துவிடக்கூடும். உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க செய்யும்.

​உடனடி ஆற்றல்:

இனிப்பு நிறைந்தது பேரீச்சை. இதில் இருக்கும் ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ் வளரும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதோடு சோர்வாக இருக்கும் பிள்ளைகளுக்கு இவை உடனடியாக ஆற்றலை தரக்கூடியது. எப்போதும் மந்தமாக இருக்கும் பிள்ளைக்கு இதை உணவில் சேர்த்து வந்தாலே பலன் தெரியும்.

​எலும்புக்கு உறுதி செய்யும்:

வளரும் பிள்ளைகளுக்கு மாங்கனீசு, மெக்னீஷியம் , செலினியம்,கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை உண்டு. இது எலும்பை வலுவாக வைத்திருக்க உதவும். இதனால் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கலாம். மூட்டுவலி பிரச்சனைகளையும் பெருமளவு குறைக்கிறது. குழந்தைகளின் பற்கள், ஈறுகள் உறுதியாக இருக்கும்.

​கண்களுக்கு நல்லது:

பேரீச்சம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது வளரும் பிள்ளைகளின் பார்வைத்திறனை கூர்மையாக்கும். மாலைக்கண் நோய், பார்வைக்குறைபாடு போன்ற பிரச்சனைகளை வராமல் செய்யும். பார்வை குறைபாடு இலேசாக இருக்கும் போது தினசரி இதை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மை அடையும். குறிப்பாக மாலைக்கண் நோய் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூட இவை உதவும்.

பிள்ளைகளுக்கு தினமும் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்துவந்தால் போதும். உடலில் எதிர்ப்புசக்தியும் அதிகரிக்கும். ஆரோக்கியமான சுவையான இனிப்பு இது. பேரீச்சையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் டேட்ஸ் ப்யூரி எடுத்துகொள்ளலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad