இந்த ஐந்து பழங்களை சாப்பிட்டால் உங்கள் இதயத்திற்கு எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம் !!!!!



பழங்கள் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இயற்கையால் நமக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம். உடலை உறுதிப்படுத்தவும் உடலில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யவும், ஏன் முழு நேர உணவாகக் கூட மருத்துவர்களால் பழங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, இதய நோய் பிரச்சினை இருக்கிறவர்களுக்கும் இதய நோய் வராமல் தடுக்கவும் சில பழங்கள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன பழங்கள்? எதில் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

வாழைப்பழம்:



வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பி12 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு வாழைப்பழத்தில் அமில எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அளவுக்கு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வேகமாக நிறுத்திவிட முடியும்.

​கொய்யா:



வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்க்ககூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யாப்பழம். இது எலும்புகளுக்கு உறுதியைக் கொடுக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதாலும் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதாலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழங்களில் ஒன்றாக இருக்கிறது. சருமப் பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது. இதய வால்வுகளில் கொழுப்புகளைத் தேங்க விடாமல் பாதுகாக்கும்.

​பப்பாளி:



பப்பாளி என்றாலே அது பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிடும் பழம் என்று ஆகிவிட்டது. ஆனால் பப்பாளியில் மிக அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இந்த பழத்திற்கு குறிப்பிட்ட சீசன் என்று கிடையாது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் பல் முதல் சிறுநீரகப் பிரச்சினை வரையிலும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது. சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழம்.

​அன்னாசி:



அன்னாசிப்பழம் வைட்டமின் பி நிறைந்த அற்புதப் பழங்களில் ஒன்று. இது உடலுக்கு வலிமை தருவதோடு ரத்த விருத்திக்கு உதவக் கூடியது. ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பு மற்றும் கொழுப்புகளை நீக்கக்கூடியது.

இதயப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் அன்னாசிப் பழத்தை ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.

​மாதுளை:



மாதுளை மற்ற பழங்களை விட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இனிப்பு, கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் துவர்ப்பு சுவையுடன் கூடிய பழம் இது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக மாதுளை இருக்கும். குடலில் உண்டாகும் புண்ணை ஆற்றக் கூடியது. கொழுப்புகளைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளும். கண் முதல் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும். ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. இதய அடைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad