"தல" அஜித்தின் வலிமை படத்தோட லேட்டஸ்ட் ப்ளான் இது தான்!!!!!



அஜித் நடிப்பில் சென்ற வருடம் பொங்கலுக்கு விஸ்வாசம் மற்றும் அதற்குப் பிறகு 2019 ஆகஸ்டில் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றது. விஸ்வாசம் படம் வசூல் ரீதியில் மிக பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. இந்த படம் வெளிவந்த அதே நாளில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் தான் அதிக அளவு வசூல் ஈட்டியது. குடும்ப ரசிகர்களை அதிக அளவு கவர்ந்தது தான் அதற்கு காரணம். பேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் 25 சதவீதம் வரை அதிகம் இருக்கும் என தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.



அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படம் முதலில் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலை தற்போது இருக்கிறது. கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து எந்த படங்களின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் மீண்டும் நிலைமை எப்போது சீராகும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அதனால் வலிமை ஷுட்டிங் துவங்குவது அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போகலாம் என கூறப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக நின்ற பிறகு ஷுட்டிங் துவங்கலாம் என படக்குழு காத்திருந்தாலும் தொடர்ந்து தாமதமானால் வலிமை படம் ரிலீசாக அடுத்த வருடம் இறுதி கூட ஆகலாம். அதனால் அஜித் படம் வெளியாகி இரண்டு வருட இடைவெளி ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அஜித் மற்றும் படக்குழு தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங்கை இந்த வருடமே நவம்பர் மாதம் துவங்க பரிசீலித்து வருவதாக தெரிகிறது. நவம்பரில் ஷூட்டிங்கை துவங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படமும் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு தான் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோதினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் சென்ற வருடம் விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதினாலும் இரண்டு படங்களும் ஓரளவு நல்ல வசூலை குவித்தன.



அஜித் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தாலும் அவரது கதாபாத்திரம் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். அவர் இதற்கு முன்பு ரஜினியின் காலா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad