சிக்கன் கறி தோசையை எப்படி செய்யலாம்னு பாக்கலாம் !!!!!
தேவையான பொருட்கள்:
>கோழிக்கறி – 200 கிராம்
>மைதா மாவு – 250 கிராம்
>தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
>அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
>பச்சை மிளகாய் – 5
>இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
>காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.
* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.
* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.