எளிய முறையில் சுறா புட்டு செய்வது எப்படி ????
* தேவையான பொருட்கள் :
- பால் சுறா மீன் _ 1/2 கிலோ
- சிறிய வெங்காயம் _ 250 கிராம்
- பச்சை மிளகாய் _ 4
- மஞ்சள் தூள் _ 1 டீஸ்பூன்
- உப்பு _ தேவையான அளவு
- எண்ணெய் _ தாளிக்க தேவையான அளவு
* செய்முறை :
> மீனை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
> பின்பு தோழி எலும்புகளை நீக்கி தூள் செய்து கொள்ளவும்.
> வெங்காயம் , பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
> வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
> பச்சைமிளகாய் இதில் சேர்த்து வதக்கவும்.
> தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.
> சுவையான சுறா மீன் புட்டு ரெடி.