உங்கள் பற்களில் கறை படிந்தது போல் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!!!!!



பற்கள் வெள்ளையாக இருந்தால் தான், அது புன்னகைக்கும் போது நம்மை அழகாக வெளிக்காட்டும். ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களால் பற்கள் தங்களின் இயற்கை நிறத்தை இழந்து மஞ்சள் கறை படிந்து அசிங்கமாக காணப்படுகின்றன. குறிப்பாக புகைப்பழக்கம் இருந்தால், அவர்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக காட்சியளிக்கும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிகோட்டின் இலைகள் பற்களின் மேல் ஒரு மஞ்சள் கறை படலத்தை உருவாக்கி, அது போகாதவாறு செய்துவிடும்.

ஒருவரது பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு முக்கிய காரணம், பற்களில் உள்ள எனாமல் பலவீனமாவதுடன், மெல்லியதாகவும் இருப்பது தான். எனாமல் தான் பற்களுக்கு பாதுகாப்பு படலமாகவும், வெள்ளை நிறத்தையும் அளிப்பதோடு, பற்கள் கூசுவதையும் தடுக்கிறது. இந்த பாதுகாப்பு படலத்தில் பிரச்சனைகள் எழும் போது அல்லது இந்த படலம் அகற்றப்படும் போது தான், வாயில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சரி, பற்களை வெண்மையாக்குவதால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடுமா? நிச்சயம் இது ஒரு தற்காலிக தீர்வாகத் தான் இருக்கும். மேலும் 6 மாதத்திற்கு ஒருமுறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரிடம் செல்வதுடன், புகைப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புகைப்பிடிப்பது தான் குறுகிய காலத்தில் பற்களை மஞ்சள் நிறமாக்குகிறது மற்றும் கடுமையான பல பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

நீங்கள் ஒரு பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்ய நினைத்தால், அதற்கு பதிலாக வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க முயற்சிக்கலாம். இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

பேக்கிங் சோடா :



பேக்கிங் சோடாவில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. அதோடு இந்த பொருள் தான் டூத் பேஸ்ட்டில் முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பேக்கிங் சோடாவைக் கொண்டு நேரடியாக பற்களைத் துலக்கும் போது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்களின் உற்பத்தியும் தடுக்கப்படும். அதற்கு பற்களைத் துலக்கும் போது டூத் பேஸ்ட் மீது சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பற்களைத் துலக்க வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு: 



ஹைட்ரஜன் பெராக்ஸைடு வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் ஒரு நேச்சுரல் ப்ளீச்சிங் பொருளாக கருதப்படுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான டூத் பேஸ்ட்டில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உள்ளது மற்றும் இது பற்களை வெண்மையாக்குவதற்கும் மற்றும் பிற நன்மைகளுக்கும் உதவுகிறது. வேண்டுமானால் இதை நீங்கள் மௌத் வாஷாகவும் பயன்படுத்தலாம்.

ஆயில் புல்லிங் :



ஆயில் புல்லிங் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குவதாக சொல்லப்படுகிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெயை ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் செல்லும் போது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் குறைந்து, பற்கள் வெண்மையாக காட்சியளிக்கும்.

மஞ்சள் தூள் :



ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை நீர் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். பின் டூத் பேஸ்ட் கொண்டு அந்த பேஸ்ட் பயன்படுத்தி 2 நிமிடம் பற்களைத் துலக்க வேண்டும். இதனால் மஞ்சுளில் உள்ள மருத்துவ குணங்கள், பற்களில் உள்ள கறைகளை நீக்கி வெண்மையாக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா :



ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து மெல்லிய பேஸ்ட் போர் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் டூத் பேஸ்ட் கொண்டு அந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: 



ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, வாயில் ஊற்றி 2 நிமிடம் வைத்து கொப்பளித்து துப்ப வேண்டும். அதன் பின் ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்த பிரஷ்ஷால் சிறிது நேரம் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, விரைவில் வெள்ளையாகும்.

உப்பு மற்றும் பேக்கிங் சோடா :



1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் டூத் பேஸ்ட் பயன்படுத்தி, தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும்.

பால் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட் :



பால் பவுடரை டூத் பேஸ்ட்டில் கலந்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக 2 நிமிடம் துலக்க வேண்டும். பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்குவதோடு, பால் பவுடரில் உள்ள கால்சியம் பற்களுக்கு கிடைத்து, பற்கள் பளிச்சென்றும் இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் நீர் :



எலுமிச்சை ஜூஸில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அந்நீரை வாயில் ஊற்றி 2 நிமிடம் கொப்பளித்து, துப்ப வேண்டும். இதனால் பற்கள் வலிமையாக இருப்பதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.

ஆரஞ்சு தோல் :



நற்பதமான ஆரஞ்சு பழத்தின் தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களைத் தேய்க்க வேண்டும். இதனால் ஆரஞ்சு பழத்தில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் உள்ள கறைகளைப் போக்கி வெண்மையாக்கும். அதோடு அடிக்கடி இவ்வாறு செய்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக ஆரஞ்சு தோல் கொண்டு பற்களைத் தேய்த்த பின், 5 நிமிடங்கள் கழித்து தான் பிரஷ் செய்ய வேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad