Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பாதங்களில் வரும் வலியை எப்படி சரி செய்வது ??!!!.......



உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவுவது பாதங்கள் தான். சுருங்க சொன்னால் உடலை சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள் தான்.

உடலில் உள்ளுறுப்புகள் போன்று பாதங்களிலும் பாதிப்புகள் உண்டாக கூடும். தலைவலி, கை, கால் வலி, கழுத்து வலி, உபாதை போன்று பாதங்களிலும் வலி உண்டாக கூடும். பாதங்களில் எரிச்சல் என்பது வேறு. பாதங்களில் வலி உண்டாவது வேறு. மற்ற பாகங்களை காட்டிலும் பாதங்களில் வலி என்பது சற்று உபாதையை கொடுக்கவே செய்யும். இந்த பாதங்களில் ஏன் வலி உண்டாகிறது? அறிகுறிகள் என்ன? என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மனிதன் வாழ்நாளில் அவனது 50 வயது வரையில் சுமார் 75 ஆயிரல் மைல்கள் வரை நடப்பதாக சொல்லப்படுகிறது. நடைபயிற்சி நல்லதே என்றாலும் தொடர்ந்து நடக்கும் போது பாதங்களில் தேய்மானம், காயம், அழுத்தம் காரணமாக தளர்வு போன்ற உபாதைகள் உண்டாக கூடும்.

இதனால் தரையில் கால் வைக்கவே பலரும் அச்சப்படுவார்கள் பாதங்கள் என்பது முழுமையாக இல்லாமல் குதிகால், கணுக்கால் கால்விரல்களுக்கிடையே உள்ள எலும்புகள் பாதிக்கப்படுவதால் இந்த வலி உண்டாகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் பாதவலி அதிகமாகிறது.

இந்த பாதவலி அலட்சியப்படுத்தகூடியதல்ல. ஏனெனில் உடலை தாங்க கூடியதே பாதம் தான் என்பதால் வலி உபாதை இலேசானதாக இருந்தாலும் அதிகமான அவஸ்தையை உண்டாக்ககூடியதே.

​பாதங்களில் குதிகால் வலி:



பாதங்களில் வலி என்பது குதிகால் வலியைக் கொண்டிருக்கும். இவை குதிவாதம் என்று அழைக்கப்படுகிறது. பாதங்களில் கால்விரல்களில் மெல்லிய தசைநாரில் வீக்கம் உண்டாகும் போது, தசைநாரில் அதிக அழுத்தம் ஏற்படும் போது காயங்கள் உண்டாகும் போது இந்த குதிகால் வலி உண்டாகலாம்.

சிலருக்கு குதிகாலிலிருந்து காலை இணைக்கும் தசைநாரில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் பின் பக்கம் குதிகால் தசைநார் மேல்நோக்கி விரிவடைவதால் பாதவலி உண்டாகும். பின்பகுதியில் இறுக்கம், கடுமையான இடங்களில் ஓடுதல், குதித்தல், வெறும் கால்களில் நடத்தல் போன்றவற்றால் பாதங்களின் பின்பகுதியில் அழற்சி உண்டாகிறது.

இவை குதிகால் மற்றும் குதிகால் தசைநாரின் மேல் வலி உண்டாகும். இவை அதிகரிக்கும் போது நடந்தாலும், ஓடினாலும் வலி உபாதை அதிகரிக்கும் பாதங்களில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் நடுப்பகுதியில் வலி உண்டாககூடும்.

​பாதங்களின் நடுவின் வலி:



உரிய காலணிகள் அணியாததால் இந்த பாதங்களின் நடுவில் வலி உண்டாகும். கணுக்கால்களிலிருந்து கால்விரல்களை இணைக்கும் பாத எலும்புகளில் வலி உண்டாகும்.. பாதங்களில் நடுவில் உண்டாகும் வலிக்கு உடல்பருமன், வளைந்திருக்கும் பாதம், கீலவாதம், கீல்வாத வீக்கம், கால் பெருவிரல்களில் வீக்கம் போன்றவை உண்டாகிறது.

சிலருக்கு கால் விரல்களில் ஒன்று வளைந்திருக்கும். சிலருக்கு நீரிழிவு இருந்தாலும் பாதங்களின் நடுவில் வலி உண்டாகும். பாதங்களில் கீழ் கல் போன்ற உணர்வு உண்டாகும். சமயங்களில் பாத எரிச்சலும் உண்டாகும்.

​பாதங்களின் முன்புறம் வலி:



இவை இயல்பாக வரக்கூடியது தான். கால் விரல் நகங்களில் உண்டாகும் பூஞ்சை தொற்றுகள், கால் ஆணி. தடிப்பு போன்ற காரணங்களால் கால்விரல் வீக்கம், நகச்சுத்தி போன்றவற்றாலும் முன்னங்காலில் வலி உண்டாகிறது.

சிலருக்கு எலும்பில் கட்டி இருந்தாலும் கூட பெருவிரலில் மெலிவு உண்டாக கூடும். இவை பாதங்களில் முன்புற வலியை உண்டாக்கும். சுருங்கிய தசையின் காரணமாக முன்னங்கால்களில் எரிச்சலும் வலியும் கூட உண்டாக கூடும்.

இந்த அழுத்தம் அதிகமாகும் போதுதான் பாதங்களில் கால் ஆணி பிரச்சனைகளும் உருவாகிறது. இப்படி பாத வளைவுகளில் வலி மேல் பாத வலி, கீழ் பாத வலி. குதிகால் வலி, பாத மேடுகளில் வலி போன்றவை எல்லாமே பாதவலிக்கான அறிகுறிகள் தான்.

​என்ன செய்யலாம்??



உடல் பருமனால் பாதவலி வரும்போது உடல் எடையை குறைத்தாலே பாத வலியும் குறையக்கூடும். ஐஸ் கட்டி ஒத்தடங்கள் கொடுப்பதும் சிறந்த நிவாரணியாக இருக்கும். பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.

பாதங்களில் வலி உண்டாகும் போது கால் பாதங்களை சரியான நிலையில் வைத்து நடக்க தொடங்கினால் வலி உபாதை குறையக்கூடும். நிற்கும் போதும் கால்களை சரியான முறையில் அழுத்தத்தோடு நிற்க வேண்டும். கால்கள் முழுமையாக தரையில் பட வேண்டும். பாதவலி இருப்பவர்கள் குளிர்காலங்களில் வெறும் தரையில் நடக்க கூடாது.



கால்களில் ஷாக்ஸ் அணிந்து நடக்க வேண்டும். இதனால் குளிரில் பாதமும் நரம்புகளும் பாதிக்காமல் இருக்கும்.பாதங்களில் வலி தொடர்ந்து இருந்தால் கீல்வாதம் அல்லது நீரிழிவால் இவை உண்டாகியிருக்கலாம் என்பதால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad