Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா ?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க !!!!!



கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியால் கர்ப்பப்பை விரிவடைகிறது. இதனால் வயிறு சருமம் விரிவடைந்து வயிற்றிலும், இடுப்பை சுற்றியும் வரிக்கோடுகள் என்னும் ஸ்ட்ரெச் மார்க்ஸை உண்டாக்கிவிடுகிறது. இதை ஆரம்பம் முதலே கவனித்து உரிய சிகிச்சை செய்துவந்தாலே வரிக்கோடுகள் குறைவாக இருக்கும்.

அதோடு பிரசவத்துக்குப்பிறகும் இந்த வரிக்கோடுகளை இல்லாமல் செய்துவிட முடியும். ஆனால் தொடர் பராமரிப்பு இருந்தால் மட்டுமே எளிதாக இந்த வரிக்கோடுகளை விரட்ட முடியும். அப்படி என்ன பொருள்களை பயன்படுத்த வேண்டும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

​டீ ட்ரீ எண்ணெய்:



இவை சருமத்துக்கும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்படும் எசன்ஷியல் எண்ணெய். தேயிலையின் தண்டு பகுதியிலிருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப் படுகிறது.

இதை சருமத்தில் பயன்படுத்தும் போது முகத்தை வறட்சியிலிருந்து காப்பாற்றி முகப்பருக்கள், கொப்புளங்கள் வராமல் தடுக்கிறது. இதிலிருக்கும் ஆன்டி மைக்ரோப்பியல் பண்புகள் அரிப்பை தடுக்க உதவுகிறது.மேலும் இவை புண் உண்டாவதையும் தடுக்கிறது.

டீ ட்ரீ எண்ணெயுடன் மூன்று மடங்கு தேங்காயெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வயிற்றில் தழும்பு இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து அப்படியே விட வேண்டும்.

இவை சருமத்தில் ஊடுருவ வேண்டும் என்பதால் சருமத்தை கழுவாமல் அப்படியே விட்டு விட வேண்டும். தினமும் ஒருமுறை இப்படி செய்துவந்தால் படிப்படியாக தழும்புகள் மறையக்கூடும்.

​ஷியா பட்டர்:



சருமத்தின் வெடிப்பை போக்குவதில் சிறந்து விளங்குகிறது ஷியாபட்டர். ஷியா மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஷியா பட்டர் வைட்டமின் ஏ, இ கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஃபேட்டி ஆசிட், சத்துகள் சருமத்துக்கும் நன்மை செய்யகூடியது. சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க இவைஉதவுகிறது.

இதை கொண்டு வயிற்றில் உண்டாகும் தழும்புகளை குறைக்கலாம். இவை சருமத்தை வறட்சியிலிருந்தும் மீட்டெடுக்கும். சருமத்தில் சேதமடைந்த செல்களை சரி செய்து ஆரோக்கியம் காக்க உதவும்.

ஷியா பட்டரை வாங்கி வடுக்கள் இருக்கும் இடங்களில் மசாஜ் செய்ய வேண்டும். வெண்ணெய் போன்று வழவழப்பாக இருக்கும் இதை தடவிய பிறகு கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடலாம். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தடவி கொள்ளலாம். பலனும் உண்டு.

​ஆப்பிள் சீடர் வினிகர்:



சருமத்தின் கருமையை போக்குவதில் ஆப்பிள் சீடர் வினிகர் பெருமளவு உதவுகிறது. கூடுதலாக சருமத்துக்கு பளபளப்பை தரவும் ஈரப்பதம் தந்து சருமத்தை காக்கவும் இவை உதவுகிறது. குறிப்பாக சருமங்களில் சுருக்கம் வராமல் தடுக்க இவை உதவுகிறது. அமிலத்தன்மை கொண்டவை என்பதால் வயிற்றின் தழும்புகளை குறைக்க உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகரை சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை தழும்புகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். அப்படியெ உலர விட வேண்டும். பிறகு அந்த இடத்தை சுத்தமாக கழுவி சருமத்துக்கான மாய்சுரைசர் தடவி வர வேண்டும். பொறுமையாக தொடர்ந்து செய்துவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

​அர்கன் எண்ணெய்:



மொரோக்கா நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் விலை சற்றே அதிகமானது அதே நேரம் இவை சருமத்துக்கும் கூந்தலுக்கும் அதி முக்கியத்துவமான குணநலன்களை கொண்டது. இவை சருமத்தின் மீது பட்டாலும் அவை மெலிதான அடர்த்தி குறைவான எண்ணெய் என்பதால் அது சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி சுத்தம் செய்வதோடு வடுக்களையும் போக்குகிறது.

வைட்டமின் இ நிறைந்திருப்பதால் சருமத்துக்கு ஊட்டம் அளித்து புதிய சருமம் போன்று மினுமினுப்பைத் தருகிறது. இதனுடன் வேறு எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. இதை மட்டுமே ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இரவு படுக்கும் போது மசாஜ் செய்து விட வேண்டும். மறுநாள் காலை வழக்கம் போல் குளித்துவிடலாம். இவை வடுக்களை மறைய செய்யும்.

​காஃபித்தூள் ஸ்க்ரப்:



காஃபியில் இருக்கும் காஃபைன் ஆனது ஆன்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது. அடிக்கடி இதை பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் வடுக்கள் மறையக்கூடும். காஃபித்தூளை ஸ்க்ரப் போன்று பயன்படுத்த வேண்டும்.

காஃபித்தூளுடன் கற்றாழை ஜெல், ஸ்க்ரப் செய்ய சர்க்கரை சேர்த்து கலந்து வயிற்றில் வடுக்கள் இருக்கும் இடத்தில் ஸ்க்ரப் செய்தபடி மசாஜ் செய்யவும். தொடர்ந்து இதை வாரம் ஒருமுறை செய்துவந்தால் வயிற்றில் இருக்கும் வடுக்கள் மறைந்துவரும்.

மேற்கண்ட ஐந்து பொருளுமே பிரசவக்கால ஸ்ட்ரெச் மார்க் குறைப்பதில் நல்ல பலன் கொடுக்கும். தொடர்ந்து பக்குவமாக பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad