முகத்தில் பார்ப்பதற்கு கரும்புள்ளிகள் போல் இருக்கிறதா !!!! அவற்றை போக்க வீட்டிலேயே செய்யும் எளிய முறை டிப்ஸ் !!!!!



முகத்தில் சிலருக்கு வெளிர் புள்ளிகள், பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். சிலருக்கு முகம், கழுத்து பகுதியில் அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணம் உடலில் அதிகப்படியான மெலனின் உற்பத்தி ஆகும் போது இந்த புள்ளிகள் அதிகமாகவே இருக்கும். இவை சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது என்றாலும் அழகான முகத்தில் இவை அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கிவிடும். 

அதனால் இயன்றவரை இந்த புள்ளிகள் தென்படும் போதே இதை சரிசெய்யும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். மெனக்கெடாமல் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு எப்படி இதை சரிசெய்வது என்று பார்க்கலாம்.
மஞ்சளும் எலுமிச்சையும்:



இரண்டுமே சருமத்துக்கு நல்லது செய்பவையே. மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுவதால் சருமத்துளைகளில் கிருமிகள் தங்காமல் பாதுகாக்கும். எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்துள்ளது. சருமப் பிரச்சனைகள், பராமரிப்பு அனைத்துக்குமே இவை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் தடவி விட வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆனது சருமத்தின் பழுப்பு புள்ளிகளை மறைக்க செய்யும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்துவந்தாலே போதும்.

வறட்சியான சருமம் கொண்டிருப்பவர்கள் எலுமிச்சை பயன்படுத்தும் போது சிறிதளவு பன்னீர் சேர்க்கலாம். அல்லது நீர் சேர்ப்பதன் மூலம் வறட்சி அதிகரிப்பதை தடுக்கலாம். ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் அதிகம் மஞ்சள் உபயோகிக்க வேண்டாம். அப்படியே பயன்படுத்தினாலும் கூட உதட்டின் மேல் பயன்படுத்த வேண்டாம்.

தயிர்:



பசுந்தயிர் கெட்டியாக எடுத்து பயன்படுத்தினால் முகம் பிரகாசமாக இருக்கும். தயிர் முகத்துக்கு இயற்கை ப்ளீச் என்று சொல்லும் அளவுக்கு முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பளிச் என்று வைக்கும். தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்திருக்கிறது.

தயிரில் இருக்கும் டைரோசின் என்னும் அமிலம் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் முகத்தில் புள்ளிகள் மந்தப்படுத்துகிறது. கெட்டித்தயிரை எடுத்து முகத்தில் தடவி இலேசாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்க வேண்டும்.

தினமும் இரண்டு வேளையாவது இதை செய்துவந்தால் புள்ளிகள் மந்தமாகி மறைய தொடங்கும். இவை கூடுதலாக முகம் ப்ளீச் செய்யவும் உதவும் என்பதோடு பாதிப்பும் இல்லாதது என்பதால் அனைவருமே பயன்படுத்தலாம்.

​தேன்:



சுத்தமான தேன் முகத்துக்கும் தேன் போன்ற பளபளப்பை தரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் தேன் இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கப் படுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க தேன் உதவும். சருமத்தின் இறுக்கத்தை தளர்த்தி கொலாஜன் உற்பத்தியை சுரப்பதால் சரும சுருக்கங்கள் இளவயதில் உண்டாவது தடுக்கப்படுகிறது.

சுத்தமான தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி விட வேண்டும். குறிப்பாக புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் புள்ளிகள் காணாமல் போகும்.

​சந்தனமும் வேப்பிலையும்:

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தன பவுடரை வாங்கி கொள்ளவும். வேப்பிலையை காம்பு நீக்கி இலையை உலர வைத்து பொடி செய்து வைக்கவும். சந்தன பவுடரையும் வேப்பிலை பவுடரையும் சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும்.

இதனுடன் பன்னீர் கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காயவிடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவேண்டும். முகத்தில் புள்ளிகள் அதிகம் இருந்தால் தினமும் இதை செய்துவந்தால் இரண்டு வாரங்களில் பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

​சோற்று கற்றாழை:

சருமத்தயாரிப்பு மற்றும் கூந்தல் தயாரிப்பு அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது கற்றாழை. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு கற்றாழைக்கும் பங்கு உண்டு.

முகத்துக்கு இயற்கையாகவே ஈரப்பதத்தை அளிக்கிறது. முகத்தில் எரிச்சல், புண், அரிப்பு, சிவப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு கற்றாழை தான். கற்றாழையை முள் நீக்கி நன்றாக கழுவி அப்படியே முகத்தில் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் புள்ளிகள் மந்தமாகி சருமம் பளீரென்று அழகாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad