எடையை குறைக்க ட்ரை பண்றவங்களுக்கு சோளத்தை வைத்து எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் !!!!!!!!!
உடல் பருமன் முதல் இதய நோய்கள் வரை சிறு வயதிலேயே நம்மை ஆட்டிப் படைத்து விடுகின்றனர். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். அப்படி என்றால் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பார்க்கும் போது நம் முன்னோர்கள் அந்த காலத்தில் முக்கியமாக பயன்படுத்திய தானியமாக சோளம் உள்ளது. சோளம் போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க முடியும். எனவே சோளத்தை நம் உணவில் சேர்ப்பது நம் உடல் எடையில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குகிறது என்று பார்க்கலாம்.
சோளம் மற்றும் எடை இழப்பு:
சோளம் அதிகளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்த முழு தானியமாகும். ஒரு நாளில் 100 கிராம் சோளம் சாப்பிடுவது தினசரி அளவில் 20% பூர்த்தி செய்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்கள் உங்க குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. நீண்ட காலத்திற்கு உங்களை சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்ன சத்துக்கள் உங்க வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்
சோளம்:
சோளம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்துறை உணவாகும். இது ஒரு பழங்கால தானியமாகும். இவை சிவப்பு, பழுப்பு, கருப்பு அல்லது ஊதா போன்ற பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது. ஆனால் மிகவும் பிரபலமான வகை சோளம் சோர்கம் பைகலர் ஆகும். இது பொதுவாக பேக்கிங்கில் அல்லது இயற்கை இனிப்பு தயாரிக்க பயன்படுகிறது. இது இயற்கையான எரிபொருள் மூலமாகும்.
ஊட்டச்சத்து அளவுகள்:
100 கிராம் சமைக்காத சோளத்தில்
கலோரிகள்: 316
புரதம்: 10 கிராம்
கொழுப்பு: 3 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 69 கிராம்
நார்ச்சத்துக்கள் :6 கிராம்
என்ற அளவில் காணப்படுகின்றன.
உடல் நல நன்மைகள்:
சோளத்தில் விட்டமின் பி என்ற சத்து உள்ளது. இது உங்க மெட்டா பாலிசத்தை மேம்படுத்துகிறது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள மக்னீசியம் எலும்பு மற்றும் இதய
ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது:
சோளத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்கள், ப்ளோனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் டானின்கள் காணப்படுகின்றன. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் அழற்சியால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.
இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைக்க உதவுகிறது.
சோளத்தை எப்படி சேர்ப்பது:
சோளம் ஒரு பல்துறை உணவு என்பதால் அரசிக்கு பதிலாக நீங்கள் தாராளமாக சோளத்தை எடுத்துக் கொள்ளலாம். இதை பச்சை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சோளத் தோசை, சோள மாவில் ஸ்நாக்ஸ் போன்றவற்றைக் கூட செய்து சாப்பிடலாம். சப்பாத்தி தயாரிக்கும் கோதுமை மாவில் சோள மாவை கலந்து சுடலாம். சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து பயனடையலாம்.