அடுத்த 45 நாட்களுக்கு இப்படித்தான் !!! கொரோனா வைரஸ் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு !!!!!
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி போதிய சிகிச்சை அளிப்பதே ஒரே தீர்வாக இருக்கிறது. இதையொட்டி கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தரப்பு கூறுகையில், ஒரேநாளில் புதிய உச்சமாக 7.2 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதிக பரிசோதனைகள் செய்வதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போதைய பாதிப்பு ட்ரெண்ட் அடுத்த 45 நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சற்றே ஆறுதல்படுத்தும் செய்திகள் வரலாம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் டயர் 2, டயர் 3 நகரங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமுள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் நோய்க் கட்டுப்பாட்டு உக்திகள் அமலில் இருக்கின்றன. இதனை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினசரி வைரஸ் பாதிப்பு நிலவரம்
* ஆகஸ்ட் 6 - 62,482 பேர்
* ஆகஸ்ட் 7 - 6,1,163 பேர்
* ஆகஸ்ட் 8 - 65,410 பேர்
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பிற்கேற்ப வைரஸ் பரிசோதனைகளையும் அதிகப்படுத்தி, தற்போது வரை மொத்தமாக 2.4 கோடி கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 14,80,884 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இது தற்போது சிகிச்சை பெற்று வரும் 6,28,747 என்ற எண்ணிக்கையை விட இருமடங்கிற்கும் மேல் ஆகும். இது மிகப்பெரிய நம்பிக்கையூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,19,364 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.