ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பெறும் மி, ரெட்மி, போக்கோ போன்களின் முழு லிஸ்ட் இதோ !!!!!!
சியோமி நிறுவனம், அடுத்த ஜெனரேஷன் MIUI 12 அப்டேட்டை அதன் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கவுள்ளது. பெரும்பாலான ஷியோமி போன்கள், சமீபத்திய ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களும் புதிய MIUI 12 அப்டேட்டை பெறும், இவைகள் அனைத்துமே MIUI 12 அப்டேட் உடன் Android 11 அப்டேட்டை பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் ஆண்ட்ராய்டு 11-இன் நிலையான பதிப்பு செப்டம்பரில் தான் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi விரைவில் MIUI 12-இன் புதிய பதிப்பை Android 11 உடன் தகுதியான சாதனங்களுக்காக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் MIUI அப்டேட்கள் மற்றும் Android அப்டேட்கள் குறித்து ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது. Xiaomi ஃபிளாக்ஷிப் மி-சீரிஸில், ஸ்மார்ட்போன்கள் வழக்கமாக Android பதிப்பின் அடிப்படையில் 2 மேம்படுத்தல்களைப் பெறுகின்றன.
மறுகையில் உள்ள ரெட்மி நோட் தொடரில், இந்த மேம்படுத்தல் ஒரு முறை மட்டுமே வரும். இப்படியாக Android 11 அப்டேட் உடன் Xiaomi MIUI 12 புதுப்பிப்பைப் பெறும் போன்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
இந்த எல்லா ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் புதுப்பிப்பைப் பெறாது என்பதை நினைவில் கொள்க. மற்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போல, சியோமி அதன் பிரபலமான முதன்மை மாடல்களுக்கான புதுப்பிப்பையே முதலில் வெளியிடும் என்பதையும் மறக்க வேண்டாம்.
சியோமி மி-சீரிஸ்:
முதலில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஆனது Mi 10, Mi 10 Pro, Mi 10 Youth Edition, Mi CC9 Pro / Mi Note 10 ஸ்மார்ட்போன்களுக்கு முதலில் கிடைக்கும். பின்னர் மி நோட் 10 லைட், மி 10 லைட் 5 ஜி, மற்றும் மி ஏ 3 போன்ற ஸ்மார்ட்போன்களை இந்த புதுப்பிப்பைப் பெறும். உடன் Xiaomi Mi 9, Mi 9 Pro 5G, Mi 9 SE, Mi CC9 / Mi 9 Lite, மற்றும் Mi CC9 Meitu Edition ஆகியவையும் இந்த புதிய அப்டேட்டைப் பெறும்.
ரெட்மி, போக்கோ மற்றும் பிளாக்ஷார்க் சீரிஸ்:
ரெட்மி தொடரின் கீழ் ரெட்மி கே 30 ப்ரோ / போக்கோ எஃப் 2 ப்ரோ ஆகியவியாக்கள் புதிய ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பைப் பெறும். இதனுடன், ரெட்மி கே 30 / போக்கோ எக்ஸ் 2, ரெட்மி கே 30 5 ஜி, ரெட்மி கே 30 ரேசிங் எடிஷன், ரெட்மி கே 30 ஐ 5 ஜி ஆகியவைகளும் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பைப் பெறுகின்றன. மேலும் ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ, ரெட்மி 10 எக்ஸ் 5 ஜி மற்றும் முழு ரெட்மி நோட் 9 சீரிஸும் இந்த புதிய அப்டேட்டைப் பெறும்.
இதற்கு அடுத்தபடியாக ரெட்மி 9, அதே போல் ரெட்மி 9 சி, ரெட்மி 9 ஏ, மற்றும் போகோ எம் 2 ப்ரோ ஆகியவைகளும் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பைப் பெறும்.
தவிர பிளாக்ஷார்க் 3 எஸ், பிளாக்ஷார்க் 3 ப்ரோ, பிளாக்ஷார்க் 3, பிளாக்ஷார்க் 2, மற்றும் பிளாக்ஷார்க் 2 ப்ரோ ஆகியவைகளும் ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 12 புதுப்பிப்பைப் பெறும்.