இன்றைய ராசிபலன் 08-08-2020 !!!!!!



மேஷராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.



ரிஷபராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.



மிதுனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை வீட்டிலேயே நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.



கடகராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.



சிம்மராசி அன்பர்களே!

இன்று எதிலும் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.



கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.



துலாராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.



விருச்சிகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.



தனுசுராசி அன்பர்களே!

காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சகோதரர்களை அனுசரித் துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். ஆஞ்சநேயரை தியானித்து வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.



மகரராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.



கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.



மீனராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad