செக்ஸ் வேணும்னா சில ஏற்பாடு செய்யலாம், கம்பானியன் தேவையில்லை: வனிதாவை விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!!!!!!!
கஸ்தூரியின் யூடியூப் சேனலுக்கு நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் வனிதாவை பற்றி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது
வனிதா உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்வேன் என்றார். உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா என்று அந்த பேட்டியில் கஸ்தூரி லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது,
எனக்கு படுக்கைக்கு செல்வதை விட நிறைய வேலை இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரும்போதே எனக்கு மெனோபாஸ் ஆகிவிட்டது. இவ என்ன பேசிக்கிட்டு இருக்கா. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா மனசுல. எல்லா பெண்களும் அவள மாதிரி இருப்பாங்களா.
இது எலிசபெத்தோட பிரச்சனை மட்டும் இல்லை. என் புருஷன் மட்டும் இப்படி ஏதாவது செய்திருந்தால் நான் நேராக போய் வெட்டியிருப்பேன். வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன். இப்படி டிவி முன்னாடி உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதை பார்த்து எலிசெபத் எவ்வளவு கஷ்டப்படுவார்.
என் புருஷன் பீட்டர் பால் போன்று இல்லை. என் புருஷன் பீட்டர் பால் போன்று தன் மனைவியை பற்றி தவறாக பேசுவார் என்று நினைக்கிறார் வனிதா. அவங்க என் கணவரை பற்றி பேசியது திருமணத்தையே கேவலப்படுத்தியது போன்று இருந்தது. வனிதாவுக்கு கம்பானியன்ஷிப் என்பதன் அர்த்தமே தெரியவில்லை. செக்ஸ் தான் தேவை என்றால், கக்கூஸுக்கு போவது போன்று இதுக்கு மட்டும் போவது என்றால் எனக்கு கம்பானியன் வேண்டாம். வாய்ல வருது எனக்கு. நான் ரொம்ப பொறுமையாக இருந்தேன். ஆனால் தற்போது பொறுமை போய்விட்டது.
செக்ஸ் தான் வேண்டும் என்றால் வீட்டில் சில ஏற்பாடு செய்யவும், ஹார்ட் தேவையில்லை, கம்பானியன் தேவையில்லை.
வனிதா ரொம்ப இன்செக்யூர். இந்த வீடியோ எல்லாம் வெளியிடுவது ஏன் என்றால் தான் செய்வது சரி என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார். அதற்காக தான் இப்படி பைத்தியம் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவரை பார்த்து பாவமாக இருக்கிறது. பீட்டர் பாலுக்கு விவாகரத்தான பிறகு இந்த திருமணம் நடந்திருந்தால் யாருமே கேள்வி கேட்க மாட்டோம். ஏனென்றால் இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.
பிரச்சனை என்னவென்றால் இன்னொருவரின் புருஷனை வைத்துக் கொண்டு பப்ளிக்காக கள்ளத்தொடர்பை பெருமைப்படுத்துவது தவறு. கேவலமாக இருக்கிறது. ஆக்ட் ஆஃப் லவ் என்று சொல்கிறார். நிறைய பேர் கிஸ் அடிப்பதையே நிறுத்திவிடுவார்கள் போன்று அவ்வளவு அருவெருப்பாக இருக்கிறது. இனிமேல் என்னால் முத்தம் கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன். அடுத்தவர் புருஷனுக்கு கேமரா முன்பு வனிதா கிஸ் கொடுக்கிறார். அவரின் பிள்ளைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
மிடில் கிளாஸ் பெண்களை தாக்கிப் பேசினார் வனிதா. சினிமாவில் இருக்கும் அத்தனை பெண்களையும் கொச்சையாக பேசினாங்க. தஞ்சாவூர் மேட்டர் வந்திருக்கிறது. மிடில் கிளாஸ் பெண்கள் என்ன பத்தினிகளா என்கிறார். நாக்கை அறுக்கணும்.
அந்த வனிதாவுக்கு அப்பா, அம்மா இல்லை, உடன் பிறந்தவர்கள் இல்லை, கணவர்கள் 1, 2, 3 கூட செட்டாகவில்லை. அவர் ரொம்ப இன்செக்யூர். நான் ஒரு பெண் சிங்கம் என்று நிரூபிக்க பார்க்கிறார். பீட்டர் பால் ஏற்கனவே விவாகரத்தாகியிருந்தால் வனிதாவை யாராவது விளாசினால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றார்.