முகப்பருவை நீக்க வேப்பிலை சோப் தயாரிப்பது எப்படி..!
வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளியை நீக்க வீட்டிலே மிக சுலபமான முறையில் வேப்பிலை சோப் செய்முறையை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். சில பெண்களுக்கு முகத்தில் எப்போதும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்துகொண்டே இருக்கும். முகத்தில் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதால் பெண்கள் பலரும் செயற்கை முறையில் செய்து விற்கக்கூடிய கிரீம் வகைகளை இந்த முக பருவிற்காக வாங்கி தடவி வருகிறார்கள். இதனால் கூட முகத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சரி வாங்க இப்போது முக சருமத்தை பாதுகாக்க வேப்பிலை சோப் எப்படி தயாரிக்கலாம் என்று முழுமையாக பார்க்கலாம் வாங்க..
வேப்பிலை சோப் தயாரிக்க – தேவையான பொருள்:
வேப்பிலை பவுடர் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 40 ml
வேப்பெண்ணை – 10 ml
காஸ்டிக் லை – 10 ml
சோப் மோட் – தேவைப்படும் வடிவில்
செய்முறை விளக்கம் 1:
முதலில் 40 மில்லி அளவில் எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெயில் 10 மில்லி அளவு வேப்ப எண்ணெயை கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் வேப்பிலை பவுடரை சேர்க்க வேண்டும்.
செய்முறை விளக்கம் 2:
காஸ்டிக் லே தயார் செய்வதற்கு 5 ml காஸ்டிக் சோடா எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு 10 ml தண்ணீர் சேர்த்து 4 மணிநேரம் வைக்கவேண்டும். இப்போது இதனை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக மிக்ஸ் செய்யவேண்டும். அடுத்து நன்றாக கலந்ததை ரெடி செய்த காஸ்டிக் லேயில் ஊற்றிக்கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 3:
காஸ்டிக் லேயில் ஊற்றிய பிறகு கெட்டியான நிலைக்கு வரும்வரை நன்றாக இதனை கலந்துகொள்ளவும். அடுத்து கலந்த கலவையை சோப் மோல்டில் ஊற்றவும்.
செய்முறை விளக்கம் 4:
சோப் மோல்டில் ஊற்றிய பிறகு வேப்பிலை சோப் ரெடி ஆகுவதற்கு 12 மணிநேரம் ஆகும். 12 மணி நேரம் கழித்த பின்னர் இந்த சோப்பை நாம் வெளியில் எடுத்துவிடாலம். இதனை செய்த நாளிலிருந்து 30 நாட்கள் பின்னரே உபயோகப்படுத்த வேண்டும்.
குறிப்பு:
இந்த வேப்பிலை சோப்பை 3 வருடம் வரை தாராளமாய் வைத்து பயன்படுத்தலாம்.
வேப்பிலை சோப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதால் சருமத்தில் ஏற்பட்ட பருக்கள், கரும்புள்ளி நீங்கிவிடும். சருமத்தில் கரும்புள்ளி பிரச்சனை உள்ளவர்கள் இந்த வேப்பிலை சோப்பை ட்ரை பண்ணி பாருங்க..!