Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின் அதிகரித்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாடும் சுற்றுசூழல் மாசுபாடும் - உண்மை என்ன?



பிளாஸ்டிக் பொருட்கள் நம் சுற்றுச்சூழலை கெடுக்கக் கூடிய ஒன்று. எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மக்காத ஒரு பொருளாக இது மண்ணிற்கு தீமையை அளித்து வருகிறது. இதனால் தான் அரசாங்கமும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் நடமாட்டம், வாகனங்கள் எல்லாம் குறைந்து இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் குறைந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம் .

போக்குவரத்து காரணமாக கார்பன் உமிழ்வு சரிந்துள்ளது, காற்றின் தரம் மேம்பட்டு உள்ளது, கங்கை நீர் சுத்தமாக உள்ளது இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வைரஸை கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் மாஸ்க், பாதுகாப்பு உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் இவற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
​கொரோனா வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு

அரசாங்கம் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்தது. ஏனெனில் பிளாஸ்டிக் பைகள் கடலில் கலந்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கை விளைவிக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கொடிய கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸிலிருந்து பாதுகாக்க பொதுவான அத்தியாவசியப் பொருட்களில் சில பிளாஸ்டிக் மாஸ்க்கள் , கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளின் சுமையை அதிகரித்துள்ளன.

​பிளாஸ்டிக் சுமையால் விளையும் தீமைகள்:



இது மட்டுமல்லாமல் மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளாக இருக்கட்டும் உணவுப் பொருட்களாக இருக்கட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பாக பேக்கிங் செய்வதற்கு பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு பிறகு குப்பைகளில் ஒட்டுமொத்தமாக குவிகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களின் மூலமும் தொற்றுநோய் அபாயம் பரவலாம் என்றும் மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கவும் செய்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு முன்னணி நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, சென்னையில் ஒரு கழிவுகளை கையாளும் வசதி அமைப்பானது திருச்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 300 கிலோ COVID-19 கழிவுகளைப் பெறுவதாகக் கூறுகிறது. பொதுவாக, அவர்கள் மே மாதத்தில் 8,000 கிலோ COVID-19 கழிவுகளையும், ஏப்ரல் மாதத்தில் 3,200 கிலோவையும் பெற்றுள்ளனர் என்பதாக கூறியுள்ளனர்.

அதிகப்படியான தாக்கம்:

தற்போது பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கின் விகிதம் எதிர்காலத்தில் பெரிய சுகாதார அபாயங்களின் அபாயத்தை அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் உங்கள் இருதய, செரிமான, சுவாச, நரம்பியல், நாளமில்லா மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். முறையான செலவழிப்பு முறை இல்லாதது கடுமையான உடல்நலக் குறைகளுக்கு கூட வழிவகுக்கும்.

தீர்வு:



உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, நச்சு மற்றும் மக்கும் அல்லாத பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறது. அதற்குப் பதிலாக மக்கக்கூடிய அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி, மட்பாண்டங்கள், இயற்கை இழைகள், காகிதம், அட்டை, அரிசி உமி, இயற்கை ரப்பர் மற்றும் விலங்கு புரதங்கள் போன்றவற்றால் ஆன பொருட்களை பயன்படுத்தலாம். இப்படி சுற்றுப்புறத்திற்கு நட்பான பொருட்களை பயன்படுத்தி நம் தாய் பூமி மாசுபடுவதிலிருந்து காக்க நம்மால் முடியும். இந்த நடவடிக்கை நம் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும். கொரோனா போன்ற தொற்றுக்கள் எதிர்காலத்தில் பரவாமலும் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad