ராட்சசன் கதையை இத்தனை நடிகர்கள் நிராகரித்தனரா ???? விஷ்ணு விஷாலின் விளக்கம் !!!!



கோலிவுட் சினிமாவில் துவக்கத்திலிருந்து மிக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் வரும் படங்களுக்கு ஒரு மினிமம் கேரண்டி வசூல் நிச்சயம் இருக்கிறது என்கிற பேச்சு சினிமா துறையில் எப்போதும் உண்டு.

தற்போது கொரோனா காலகட்டத்தில் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கின்றனர். சினிமா ஷுட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் இவர்கள் வேறு வழி இல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றனர். அதனால் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் அப்படி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் ஒரு பேட்டியில் பங்கேற்றுள்ளார்.

அப்போது தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றி அவர் பேசியுள்ளார். விஷ்ணு ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக தான் தனது கெரியரை துவங்கினார். ஆனால் தனக்கு காயம் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து விலகி சினிமா பக்கம் வந்து விட்டார். நான் கிரிக்கெட்டை விட வில்லை, கிரிக்கெட் தான் என்னை விட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா என்ற கடலில் குதித்த பிறகு இங்கு உயிர் பிழைத்த இருப்பது தான் முக்கியம் என எண்ணி நான் அனைத்து விஷயங்களும் செய்தேன் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு படம் முடித்ததும் அதை திரையில் பார்க்கும் போதும் தனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும் என கூறும் அவர், ஒரு கட்டத்தில் தனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைத்தது. நான் முடிவு செய்தால் அதில் 80 சதவீதமாவது சரியாக இருக்கிறது என எனக்கு தோன்றியது.அந்த சமயத்தில் தான் நான் 
ராட்சசன் படத்தில் நடிக்க முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.



விஷ்ணு நடித்த பல கதைகள் பல ஹீரோக்கள் நிராகரித்த கதைகளாக தான் இருந்தது என்றும் விஷ்ணு தெரிவித்துள்ளார். ராட்சசன் படத்தின் கதையை 17 ஹீரோக்கள் மற்றும் 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்து அதற்குப் பிறகு தான் தன்னிடம் வந்தது என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ராட்சசன் படம் தன் கையை விட்டு போனது என்றும் மீண்டும் அது தன்னைத் தேடி வந்தது என்றும் விஷ்ணு கூறியுள்ளார். பிறகு அவர் இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போலத்தான் விஷ்ணு முன்னர் நடித்த முண்டாசுப்பட்டி என்ற படத்தின் கதையும் பல ஹீரோக்களை தாண்டித்தான் இவருக்கு வந்தது என கூறி உள்ளார்.

விஷ்ணு சினிமாவில் நடிக்கத் தொடங்கி ஒரு சில படங்கள் ப்ளாப் ஆனதால் அதற்கு பிறகு தனக்கு வரும் படங்களை உடனே ஒப்புக் கொள்ளாமல் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க துவங்கினாராம் அவர். தன்னிடம் வந்த பதினோரு படங்களை அவர் வேண்டாம் என ரிஜெக்ட் செய்திருக்கிறாராம். இந்த படங்கள் கமர்ஷியல் காமெடி என நன்றாக இருந்தாலும் வித்தியாசமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை வேண்டாம் என கூறி இருக்கிறாராம். மாதக் கணக்கில் வீட்டில் சும்மா கூட இருந்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பிரபலமாக இருக்கும் ஒடிடி தளங்கள் பற்றி பேசிய அவர், தமிழ் சினிமாவில் அவை மிகவும் பிரபலம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான் என தெரிவித்துள்ளார். மக்களும் தியேட்டர்களுக்கு சென்று பெரிய கொண்டாட்டத்துடன் படத்தை பார்ப்பதற்கு தான் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் OTT தளங்களில் அதிகம் யாரும் கவனம் செலுத்துவதில்லை என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad