ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகும் காஜலின் பாரிஸ் பாரிஸ் படம் !!! விவரங்கள் உள்ளே !!!!!
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் குயின். பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டிய அந்த படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. அந்தப் படத்தின் மூலமாக கங்கனாவுக்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தினை தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் காஜல் அகர்வால் நடிப்பில் ரீமேக் செய்து உள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த படம் 3 வருடங்களுக்கு முன்பு துவங்கியது. தமிழில் காஜல் நடிக்க மற்ற மொழிகளில் வேறு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார்.
2017ல் துவங்கி ஷூட்டிங் நடந்து முடிந்த இந்த படம் கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. இந்த படத்தினை சென்சார் செய்வதிலும் பல சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் பாரிஸ் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்குவதற்காக அதில் 25 காட்சிகளை வெட்ட சொல்லியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது படக்குழு. அதற்கு பிறகு இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர்.
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது போல தெரிகிறது. தயாரிப்பாளர் தற்போது ஒரு முன்னணி ஓடிடி இணையதளத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள குயின் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். அதே போல தெலுங்கில் 'தட் இஸ் மகாலட்சுமி' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள படத்தில் தமன்னா நடித்துள்ளார். மேலும் கன்னடத்தில் பட்டர்பிளை என்ற பெயரிலும், மலையாளத்தில் ஜாம் ஜாம் என்ற பெயரிலும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நான்கு மொழிகளிலும் ஷுட்டிங் ஒரே நேரத்தில் நடைபெற்றாலும் ஹீரோயின்கள் மட்டும் மாற்றப்பட்டு ஷுட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இது ரீமேக் படம் என்பதால் அதில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் இதற்கு முன்பு அளித்த பேட்டியில் 'நாங்கள் தமிழில் கதையை எடுக்கிறோம். நான் இது ஒரு புதிய படம் போலவே நடிக்கிறேன். இது என்னுடைய ஸ்பெஷல் ப்ராஜெக்ட் ஆக இருக்கும்' என கூறியிருந்தார். இந்த படத்தில் வசனம் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தில் எல்லி அவ்ரம், வினையா பிரசாத், பார்கவி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் ஆகிய படங்கள் நேரடியாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படமும் இணைய உள்ளது. ஏற்கனவே ஓடிடி இணைய தளங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே வெளியிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சினிமா துறையினர் மீது வைக்கப் பட்டு வருகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
காஜல் அகர்வால் அடுத்ததாக தன் கைவசம் பல பெரிய படங்களை வைத்திருக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அந்த படமும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.