பாதாம் ஆரோக்கியமான உணவு தான்..ஆனால் யாரெல்லாம் சாப்பிடக் கூடாதுனு தெரியுமா????



பாதாம் பருப்பு ஆரோக்கியமான நட்ஸ் வகை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இதை உலகளவில் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். ஆபிஸ் நேரங்களில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தேவை என்றால் கூட அதில் பாதாம் தான் முதலிடம் பிடிக்கும். பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை உங்க சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இதய நோய்களின் வீரியத்தை குறைக்கவும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் உதவுகிறது.

இருப்பினும் இந்த பாதாம் பருப்புகள் சிலருக்கு பிடிக்காத ஒன்றாக உள்ளது. அவர்களுக்கு வேறுபட்ட சுகாதார பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. எனவே யார் யாரெல்லாம் பாதாம் பருப்பை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
பாதாம் பருப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள்



மற்ற ஆரோக்கியமான உணவைப் போல பாதாமை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே பாதாமை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்

மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள். பாதாமில் இயற்கையாகவே மாங்கனீசு அதிகளவில் உள்ளது. இது உங்களுக்கு 0.6 மி. கி கனிமத்தை வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் 27 சதவீதம் ஆகும். நிறைய பாதாம் பருப்பை உண்பது இதில் மாங்கனீஸ் இருப்பதால் போதைப்பொருள் உணர்வைத் தூண்டும்.

​நட்ஸ் அழற்சி

நட்ஸ் அழற்சி இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட்ட பிறகு படை நோய், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை பெறுகின்றனர். அந்த மாதிரியான அழற்சி ஏற்படுபவர்கள் பாதாம் பருப்பை தவிர்ப்பது நல்லது. நட்ஸ் சாப்பிடுவது அனாபிலாக்ஸிஸுக்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள்

சிறு குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. டிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்டடிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்ட இயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

விட்டமின் ஈ

பாதாமில் அதிகளவு விட்டமின் ஈ உள்ளது. 28 கிராம் பாதாமில் 7.4 மி. கி விட்டமின் ஈ காணப்படுகிறது. இது அன்றாட தேவையில் 15 மி. கி அளவை பூர்த்தி செய்கிறது. இது சோம்பல், மங்கலான பார்வை, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு ஆகியவற்றை போக்கும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad