Matrimony OTT-Platforms Jobs Coupons Business

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஏன் விடுமுறை கொடுக்கப்பட்டது என தெரியுமா???



இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஞாயிறு எந்த வார்த்தையைக் கேட்டாலே சந்தோஷம் வந்துவிடும். இந்தியாவில் ஞாயிறு என்றால் விடுமுறை நாள் வாரத்தில் முதல் நாளான ஞாயிறு பொது வார விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலர் ஞாயிற்றுக்கிழமையையே விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஞாயிறு விடுமுறை:



பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல அத்தியாவசிய விஷயங்கள் மட்டுமே ஞாயிறு அன்று செயல்படும். அந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு வார விடுமுறை சுழற்சி முறையிலோ அல்லது வேறு நாளிலோ வழங்கப்படுகிறது. இது தான் தற்போது இந்தியாவில் இருக்கும் நடைமுறை பெரும்பாலான மக்கள் ஞாயிறு விடுமுறையில் இருப்பதால் அன்று ஊரே களைகட்டியோடும்.

ஒய்வு:



அன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில் நாட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். சினிமா திரையரங்கங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறாக அன்றைய நாளில் பொழுது போக்கவும், அழகாகக் கழிக்கவும் மக்கள் அதிகமாக விரும்புவார்கள்.

வாரச் சம்பளம்:



இந்த ஞாயிறு விடுமுறை இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா? அதைப் பற்றித் தான் இந்த பதிவில் காணப்போகிறோம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைபற்றிய போது இந்தியாவில் பெரும்பாலும் வாரச் சம்பள அடிப்பையிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

வாரம் விடுமுறை:



வாரம் வாரம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு செல்வார்கள் மறுநாள் வந்தால் அடுத்து ஒரு வாரத்திற்குப் பின்னர் கணக்கு முடிக்கப்படும். இப்படியாகத்தான் இந்தியாவில் சம்பள முறை அமலிலிருந்தது. அப்பொழுது எல்லாம் மக்கள் சம்பளம் பெற்றுவிட்டார்கள் என்றால் அடுத்த நாள் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்துடன் நேரம் செலவு செய்து ஓய்வெடுப்பார்கள்.

மாத சம்பளம்:

மக்கள் எல்லாம் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றினர். மாதம் ஒரு முறை மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் குடும்பங்களோடு செலவிடத் துவங்கினர். இது அவர்களின் உடலுக்கும் மனதிற்கும் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. மாதம் ஒருநாள் ஓய்வு என்பது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

அரசு அதை ஏற்க மறுத்தது:

இந்நிலையில் 1881ம் ஆண்டு நாராயண் மேகாஜி லோகண்டேஜி என்பவர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் தொழிலாளர்களை பணியாற்றச்சொல்வது கொடுமை. அதனால் வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது.

வேலை கிடைக்க வேண்டும்:

அதன் பின் அதற்காக 1881ம் முதல் நாராயண் அதற்காக போராட்டத்தை முன்னெடுக்கத் துவங்கினர். தொழிலாளர்களுக்கு வார விடுமுறை தேவை எனக்கூறி வாரம் ஒருநாள் சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1889:

அதன் பின்னர் 1889ம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவித்தது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் வார விடுமுறை தினமாக ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று தான் அத்தியாவசிய தேவை இல்லாத மற்ற துறைகள் எல்லாம் விடுமுறையில் இருக்க துவங்கின.

ஞாயிற்றுக்கிழமை:

வார விடுமுறை என்பது சரிதான் அது ஏன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது தெரியுமா? அதற்குப் பின்னாலும் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும் போதுதான் இது கொண்டுவரப்பட்டது. அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவிக்க முடிவெடுத்தனர்.

சர்ச்:



அதற்கு முக்கியமான காரணம் ஆங்கிலயேர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் மதத்தின் முக்கிய நாளாக ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் குடும்பத்துடன் சர்ச்சிற்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இடைவெளி:

இப்படிதான் ஞாயிறு விடுமுறை என்பது வந்தது. இந்த முறை வந்த போதே தொழிலாளர்களுக்கு 30 நிமிட கட்டாய உணவு இடைவெளி விட வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டது. அதனால் மக்கள் நிம்மதியாகக் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர். பிரிட்டிஷ் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி சம்பள நாளாக இருந்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad