சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை !!!!!



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 544 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையேற்றம் நீடிக்கிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூலை 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,717 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 68 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 544 ரூபாய் உயர்ந்து 38,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,951லிருந்து இன்று ரூ.5,024 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 39,608 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 584 ரூபாய் உயர்ந்து 40,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,803 ஆகவும், டெல்லியில் ரூ.4,789 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,844 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,703 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,637 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,715 ஆகவும், ஒசூரில் ரூ.4,717 ஆகவும், கேரளாவில் ரூ.4,548 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ரூபாய்க்கு மேல் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.60.10 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.65.70 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad