’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!


கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சிபிஐ விசாரணை, கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* வேலூர் மாவட்டத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,460ஆக உயர்ந்துள்ளது.

* தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்தவர்களை கண்டித்து வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

* மதுரையில் அமலில் இருந்த முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

* மன்னார்குடி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கஸ்டடி மரணத்தில் காவலர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url