சாம்சங் கேலக்ஸி A21s-இன் 6GB ரேம் இப்போது அதிரடி ஆஃபரில்!!!!! விலையை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !!!!
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மார்ட்போனின 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் எந்த விதமான விலை மாற்றத்தையும் பெறாமல் அதே ரூ16,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களும்சாம்சங் ஸ்டோர்ஸ்மற்றும் முக்கிய மின்-சில்லறை விற்பனையாளர்கள் வழியாக மூன்று வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமராக்கள், சாம்சங் எக்ஸினோஸ் 850 SoC, மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் (6 ஜிபி + 64 ஜிபி) ஸ்மார்ட்போனின் புதிய விலை:
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ஆனது ரூ.18,499 இல் இருந்து ரூ.17,499 ஆக குறைந்துள்ளது. அதாவது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த தகவலை மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் தனது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக பகிர்ந்துள்ளார். இருப்பினும், சாம்சங் நிறுவனம் இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா தளம் வழியாக கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது 720 × 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GHz ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற மூன்று மெமரி வகைகளில் வருகிறது. தவிர பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.
ரூ.13,999 க்கு இதைவிட பெஸ்ட் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இப்போதைக்கு கிடைக்காது!
கேமராத்துறையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது, 48 மெகாபிக்சல் (எஃப் / 2.0) அளவிலான முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
அதில் 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட் சென்சார் +2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளும் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஹோல்-பஞ்சில் 13 மெகாபிக்சல் (எஃப் / 2.2) செல்பீ கேமரா உள்ளது.
இந்த லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஆனது ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மென்பொருள் துறையை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 கொண்டு இயங்குகிறது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி VoLTE, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் க்ளோனாஸுடன் ஏ-ஜிபிஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.7 x 75.3 x 8.9 மிமீ மற்றும் 192 கிராம் எடையை கொண்டுள்ளது.