வேற போன் வாங்கிடாதீங்க !!! ஆகஸ்ட் 4 வரைக்கும் வெயிட் பண்ணுங்க !! அமேசான் பிரைம் டே யில் ரெட்மி 9 அறிமுகம் !!!!!
இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பதை சியோமி டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. வெளியான டீஸரைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரைம் டே விற்பனையின் போது ரெட்மி 9 அமேசானில் விற்பனைக்கு வரும்.
ரெட்மி இந்தியா தனது ட்விட்டர் அக்கவுண்டில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒரு புதிய ரெட்மி சாதனம் அறிமுகம் செய்யப்படுவதை வெளிப்படுத்தியது. இந்த ட்வீட்டில் ‘ப்ரைம்’ என்ற வார்த்தையைக் காட்டும் ஒரு படமும் உள்ளது, மேலும் ஸ்மார்ட்போனின் பிரதிபலிப்பு ஒன்பது என்பதைக் காட்டுகிறது. ஆக ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை இது தெரிவிக்கிறது.
ரெட்மி 9 டிஸ்பிளே விவரங்கள்:
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொம்டா ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு, 19.5: 9 என்கிற திரை விகிதம், 394 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவற்றுடன் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
ரெட்மி 9 ப்ராசஸர், ரேம், ஸ்டோரேஜ் விவரங்கள்:
இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 2GHz மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது மாலி-ஜி 52 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் 4 ஜிபி வரை ரேம் உள்ளது. இன்டர்நஷல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 64 ஜிபி வரை பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மெமரியை நீட்டிக்கும் ஆதரவினையும் கொண்டுள்ளது.
ரெட்மி 9 கேமரா விவரங்கள்:
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா (எஃப் / 2.2) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (எஃப் / 2.2 மற்றும் 118 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + எஃப் / 2.4 கொண்ட 5 மெகாபிக்சல் டெப்த் செஸ்னார் + 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகளை கொண்ட ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இதன் பின்புற கேமரா அம்சங்களை பொறுத்தவரை கெலிடோஸ்கோப், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மோட் மேக்ரோ மோட், போர்ட்ரெயிட் மோட் மற்றும் 30fps வேகத்தில் 1080p வீடியோ ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
முன்பக்கத்தை பொறுத்தவரை எஃப் / 2.0 மற்றும் 77.8 டிகிரி [பீல்ட் ஆப் வியோ கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இது பால்ம் ஷட்டர், போர்ட்ரெயிட் மோட், எச்டிஆர், ஸ்கிரீன் ஃபிளாஷ், செல்ப் டைமர் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி 9 பேட்டரி மற்றும் இதர விவரங்கள்:
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 18W க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட்சார்ஜிங் ஆதரவுடன் 5,020mAh பேட்டரியுடன் வருகிறது. சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போ உடன் 10W சார்ஜரை அனுப்புகிறது. ரெட்மி 9 ஆனது AI பேஸ் அன்லாக்கையும் தரிக்கிறது, அதே சமயம் பின்புற கைரேகை சென்சாருடன் வருகிறது.
ஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது!
கடைசியாக, இணைப்பு விருப்பங்களை அதாவது கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை இது 4G VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n / ac, ப்ளூடூத் வி 5, வைஃபை டைரக்ட், எஃப்எம் ரேடியோ, என்எப்சி, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி வடைப் சி போர்ட் மற்றும் இன்ப்ராரெட் சென்சார் போன்றவைகளை கொண்டுள்ளது. மேலும் Vibration motor, distance sensor, ambient light sensor, accelerometer மற்றும் electronic compass போன்ற சென்சார்களையும் கொண்டுள்ளது.
ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பின்படி தோராயமாக):
4GB ரேம் + 64GB - ரூ.8,540
4GB ரேம் + 128GB - ரூ.10,675
6GB ரேம் + 128GB - ரூ.12,815 ஆகும்.