ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தக்க கூடிய REALME V 5 மொபைலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் !!!!!
வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி ரியல்மி நிறுவனத்தின் வி தொடரின் கீழ் அறிமுகமாகும் முதல் மாடலாக ரியல்மி வி5 வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பது டீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி வி5 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 720 SoC உடன் வரும் மற்றும் 8 ஜிபி வரை ரேம் கொண்டிருக்கும். கூடுதலாக, இது ஆன்லைன் சந்தையில் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
ரியல்மி வி 5 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 2 மணி (அதாவது இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு நடக்கவுள்ளது. இதற்கிடையில், வெளியான டீஸர்கள் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தையும் அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பையும் காட்டுகின்றன.
மேலும் நிறுவனம் தனது சீனா போர்ட்டலில் ஒரு மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது, இது அதன் பின்புறத்தை மட்டுமல்ல, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்ட முன்பக்கத்தையும், ஒரு செல்பீ கேமராவுடன் வெளிப்படுத்துகிறது. ரியல்மி வி5 ஸ்மார்ட்போன் ஆனது சில்வர், ப்ளூ மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:
கிடைக்கப்பெற்ற ஆன்லைன் பட்டியலின் படி, டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரியல்மி வி5 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்கும் மற்றும் 20: 9 விகிதத்துடன் 6.5 இன்ச் அளவிலான முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம்.
இது 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 SoC மூலம் இயக்கப்படும். ரியல்மி வி5 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவும் இருக்கும், இது கடந்த வாரம் டீஸ் செய்யப்பட்டது.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி வி5 குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும், அதில் 48 மெகாபிக்சல் சாம்சங் முதன்மை சென்சார் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் ரியல்மி வி5 ஸ்மார்ட்போன் ஆனது அதன் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் ஆகியவற்றுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போன் 4,900 எம்ஏஎச் பேட்டரியுடன் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.