பிரபாஸ் 21 அப்டேட் : தீபிகா படுகோனே உடன் ஜோடி சேர போகிறாரா பிரபாஸ்???? சம்பளம் எவ்வளவு தெரியுமா!!!!



உபேந்திரா ஹீரோவாக நடித்த ஐஸ்வர்யா கன்னட படம் மூலம் நடிகையானவர் தீபிகா படுகோன். அதன் பிறகு ஃபரா கான் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் தீபிகா.

பாலிவுட்டில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்ற தீபிகா அதன் பிறகு ஹாலிவுட் சென்றார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் தீபிகா. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகு படத்தை தேர்வு செய்வதில் தீபிகா அவசரம் காட்டவில்லை.

திருமணத்திற்கு பிறகு தீபிகா மேக்னா குல்சார் இயக்கத்தில் சாபக் படத்தில் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். சாபக் படம் மூலம் தீபிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதன் பிறகு கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து வந்த 83 படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தார். 83 படத்தில் ரன்வீர் சிங் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவாக நடித்துள்ளார். 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது பற்றிய படம் தான் 83.

இந்நிலையில் தீபிகா படுகோன் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் அந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். அந்த படத்தை பிரபாஸ் 21 என்று தற்போதைக்கு அழைக்கிறார்கள். பிரபாஸ் 21 மூலம் தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். முன்னதாக கீர்த்தி சுரேஷை வைத்து நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். அவர் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா சேர்ந்து நடிப்பதால் தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

பிரபாஸ் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு பெரும் தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு முன்பு பிரபாஸ் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ராதே ஷ்யாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ராதே ஷ்யாம் படத்தை முடித்த பிறகு பிரபாஸ் நாக் அஸ்வின் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் சாஹோ படம் மட்டுமே வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து தான் பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வந்தார்.

பிரபாஸின் புதுப்பட அறிவிப்பு வரும்போது எல்லாம் அனுஷ்கா ரசிகர்கள் தான் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதாவது பிரபாஸின் புதுப்படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரபாஸுக்கு ஏற்ற ஹீரோயின் அனுஷ்கா தான் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

பிரபாஸ் 21 பட ஹீரோயின் தீபிகா படுகோன் என்பது உறுதியானதும் அனுஷ்கா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரபாஸ் 21 பட ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url