தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - ரிசல்ட் எப்படி பார்ப்பது?
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்தப்படாத சூழல் ஏற்பட்டது. தொடர் ஊரடங்கால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலை உண்டானது.
இதையடுத்து தேர்வை அதிரடியாக ரத்து செய்துவிட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மார்ச் 2020ல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் / ஜூன் மாதத்தில் பிளஸ் ஒன் பருவத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் அரியர்ஸ் தேர்வு எழுதினர். இதன் முடிவுகளும் இன்று வெளியாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வு முடிவுகளை,
dge.tn.gov.in
dge1.tn.nic.in
tnresults.nic.in
ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.