WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல் - Salary

 WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் மத்தியில் பிரசித்தி பெற்ற WWE மல்யுத்தப் போட்டிகளில் அதிக ஊதியம் பெறுபவர் யார் என்ற கேள்வி ரசிகர்களைத் துளைக்காமல் இருந்ததில்லை.

பணம் கொழிக்கும் இந்த WWE விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம். அதற்கு விடையாக அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தற்போதைய யூனிவர்சல் சாம்பியனான பிராவ்ன் ஸ்ட்ரோமேன் 2019ம் ஆண்டில் 1.9 மில்லியன் டாலர்களை ஈட்டி 10ம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக முன்னாள் உலக சாம்பியன் டிரிபிள் எச்சின் மனைவியும், தற்போதைய தலைமை பிராண்ட் அதிகாரியுமான ஸ்டெபானி மெக்மோகன் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார்.

WWE உரிமையாளர் வின்ஸ் மெக்மோகனின் மகனும் ஸ்டெபானியின் அண்ணனுமான ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்களை ஈட்டி 8வது இடத்தில் உள்ளார்.ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அனுபவ வீரர் கோல்ட்பெர்க், 3 மில்லியன் டாலர்களுடன் ஏழாவது இடத்திலும், அதிரடி வீராங்கனை பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும், 3.3 மில்லியன் டாலர் வருவாயுடன் டிரிபிள் எச் 5ம் இடத்திலும் உள்ளனர்.

தந்திரக்கார சேத் ரோலின்ஸ் 4 மில்லியன் டாலர்களை குவித்து நான்காம் இடத்திலும், வைப்பர் எனப்படும் ரேண்டி ஆர்டன் 4.1 மில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்திலும், ரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் "போஸ்டர் பாய்" ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

"தி பீஸ்ட்" எனப்படும் 42 வயது முரட்டு வீரரான பிராக் லெஸ்னர்தான் வருவாயில் முதலிடத்தைப் பிடித்துள்ளார், அவர் ரோமன் ரெய்ன்ஸைவிட இருமடங்கு அதிகமாக அதாவது 10 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். இப்போட்டிகள் திட்டமிடப்பட்ட நாடகம் என கூறப்பட்டாலும், ரசிகர்களிடம் 40 ஆண்டுகளாக குறையாத வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

WWE நட்சத்திரங்கள் பெற்ற ஊதியம்:

10வது இடம்: Braun Strowman - 1.9 மில்லியன் டாலர்

9வது இடம்: Stephanie McMahon - 2 மில்லியன் டாலர்

8வது இடம்: Shane McMahon - 2.1 மில்லியன் டாலர்

7வது இடம்: Goldberg - 3 மில்லியன் டாலர்

6-வது இடம்: Becky Lynch 3.1 மில்லியன் டாலர்

5-து இடம்: Triple H - 3.3 மில்லியன் டாலர்

4-து இடம்: Seth Rollins - 4 மில்லியன் டாலர்கள்

3-வது இடம்: Randy Orton - 4.1 மில்லியன் டாலர்

2வது இடத்தில் Roman Reigns 5 மில்லியன் டாலர்

முதலிடத்தில் Brock Lesnar 10 மில்லியன் டாலர்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad