குவாட் ரியர் கேமராவுடன் LG Q61 அறிமுகம்!

குவாட் ரியர் கேமராவுடன் LG Q61 அறிமுகம்!
LG Q61 நிறுவனத்தின் கியூ-சீரிஸின் கீழ் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் எல்ஜி கே 61-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் இராணுவ தர வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

போனின் விலை:
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட LG Q61-ன் விலை KRW 369,600 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700) ஆகும். இந்த போன் டைட்டானியம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் மே 29 முதல் தென் கொரியாவில் கிடைக்கும்.

போனின் விவரங்கள்:
LG Q61, 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். போனின் உள்ளே 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

போனின் பின்புறம் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, போனில் எல்டிஇ, என்எப்சி, புளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எல்ஜி கியூ 61 MIL-STD 810G மற்றும் DTS: X 3D ஸ்டீரியோ செயல்பாடுகளை ஆதரிக்கிறது.

LG Q61 SPECIFICATIONS
  • 6.5-inch 19.5:9  (2340 x 1080 pixels) FHD+ display
  • 2.3GHz Octa-Core MediaTek Helio P35 (MT6765) 12nm Processor with IMG PowerVR GE8320 GPU
  • 4GB RAM, 64GB storage, expandable memory up to 2TB with microSD
  • Dual SIM
  • Android 10
  • 48MP rear camera, 8MP Ultra-wide sensor, 2MP macro sensor, 5MP depth sensor, LED Flash
  • 16MP front-facing camera
  • 3.5mm audio jack, DTS:X 3D Surround
  • Rear fingerprint sensor, Google Assistant Button
  • MIL-STD 810G Compliance
  • Dimensions: 164.5 x 77.5 x 8.4mm; Weight: 191g
  • 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, NFC, GPS / GLONASS, USB Type-C
  • 4000mAh built-in battery
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad