பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் Honor X10 5G அறிமுகம்!

Honor X10 5G ஆன்லைன் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் 5 ஜி இணைப்பை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 5 ஜி ஆதரவு மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆக்டா கோர் செயலி ஆகியவை உள்ளன.
போனின் விலை:
Honor X10 5G சீன இ-காமர்ஸ் தளமான விமாலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை 1,899 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,200). அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 2,199 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,400) மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரெஜின் விலை 2,399 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,500) ஆகும்.
இந்த போன் சில்வர், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும். ஹானர் எக்ஸ் 10-க்கான ஆர்டர் சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த போன் மே 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
போனின் விவரங்கள்:
டூயல்-சிம் Honor X10 5G Android 10 உடன் மேஜிக் யுஐ 3.1.1-ல் இயங்குகிறது. இந்த போன் 6.63 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஆக்டா கோர் கிரின் 820 சிப்செட், 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.
Honor X10 5G பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் பாப்-அப் செல்பி கேமரா உள்ளது. பின்புறத்தில், 40 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது சென்சார் ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி ஆதரவு, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஹானர் எக்ஸ் 10 எடை 203 கிராம் ஆகும்.