கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 61.98 சதவீதம் ஆண்கள், 37.92 சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தை தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 508 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு 4,058 ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக சென்னையில் இதுவரை இல்லாத வகையில், 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் சென்னையின் ஒட்டுமொத்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2008 ஆக அதிகரித்தது.
சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,103 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 18ம் தேதி சென்னையில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 45 நாட்களுக்குப் பின்னர், கடந்த மே 1ம் தேதி சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.
அடுத்த நான்கே நாட்களில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் தொற்று இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை நான்காக குறைந்திருக்கிறது.தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 49.48 சதவிகிதம் பேர் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்ட்வர்களின் 319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேவேளையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
ஆரம்பம் முதலே வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டும் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 45.93 சதவீதமாகும்.
குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 434 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 467 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 16 பேரும் பாதித்து உள்ளனர்.