கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்; சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் - குழந்தை உயிரிழந்தது
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 32). இவரது கணவர் ஜெகன். வியாசர்பாடியை சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகாலட்சுமி கணவரை பிரிந்து குழந்தைகளோடு எல்.எண்டத்தூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.

இதன் மூலம் மகாலட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை அவரது பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

சம்பந்தபட்ட வாலிபரையும் மகாலட்சுமியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி உத்திரமேரூர் அருகே உள்ள மணித்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையுடன் குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். குழந்தை கிணற்றில் மூழ்கியது. இது குறித்து உத்திரமேரூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டனர். உத்திரமேரூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது குகை பகுதியை சேர்ந்த லீசா சொரூப் (வயது 20) என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லீசா சொரூப் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார்-லீசா சொரூப் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் லீசா சொரூப் வீட்டில் தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லீலா சொரூப் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் லீசா சொரூப் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘அம்மா நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துவிட்டேன். என்னால் தான் குடும்ப மானம் போய் விட்டது. தற்போது உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்‘ என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி லீசா சொரூபின் தந்தை ரங்கசாமி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரிடம் விசாரணை

புதுப்பெண் தற்கொலை குறித்து அவருடைய கணவர் ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, லீசா சொரூபை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஜ்குமார் மீது அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னையர் தினத்தை முன்னிட்டு லீசா சொரூப் தனது அம்மாவுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து அனுப்பினார். இதனால் கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியுடன் கோபித்துக்கொண்டு ராஜ்குமார் வெளியே சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து வெளியே அமர்ந்து விட்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லீசா சொரூப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து மனைவி இசக்கியம்மாள் (வயது 60). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இசக்கியம்மாளுக்கும், அவருடைய பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இசக்கியம்மாள் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் சுடலைமுத்து அவருடைய பேத்தியை கண்டிக்காமல், இசக்கியம்மாளை கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தனியார் தோப்பில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் இசக்கியம்மாள் என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் இசக்கியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad