Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்கம் அளிக்கப்படும்; டிஜிட்டல் முறையில் கல்வி கற்க, பிஎம் இ-வித்யா திட்டம்: ஒவ்வொரு வகுப்புக்கும் கல்வி கற்பிக்க தனியாக ஒரு சேனல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்கம் அளிக்கப்படும்; டிஜிட்டல் முறையில் கல்வி கற்க, பிஎம் இ-வித்யா திட்டம்: ஒவ்வொரு வகுப்புக்கும் கல்வி கற்பிக்க தனியாக ஒரு சேனல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு வருகிறார்.  அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக மீண்டும் திறக்க முடியாத சூழலில், ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.  ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.

இதற்காக இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாட புத்தகங்கள் சேர்க்கப்படும்.  ஏற்கனவே 3 கல்வி சேனல்கள் உள்ள நிலையில், ஆன்லைன் வழி கல்விக்காக மேலும் 12 புதிய கல்வி சேனல்கள் தொடங்கப்படும்.  புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச். நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, ஓரிரண்டு நாட்களில், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் என அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து அவர்களை பாதுகாக்க சுகாதார பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். வங்கிக்கணக்கில் பணம் போடலாம். இதர சமூக திட்டங்களை பயன்படுத்தி உதவலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி இன்று வெளியிட்டார்.  அவர் கூறும்பொழுது, வேலைவாய்ப்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதியானது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இன்று 5-வது நாளாக இன்று காலை 11 மணிக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு:

* டிஜிட்டல் முறையில் கல்வி கற்க, பிஎம் இ-வித்யா திட்டம் அறிமுகம்.
* செவி மற்றுத் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு பாடத்திட்டம்.
* நாடு முழுவதும் மேலும் 12 கல்விக்தொலைக்காட்சிகளை தொடங்க திட்டம்.

* ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வியை மேம்படுத்த, புதிதாக கல்வி சேனல்கள் தொடங்கப்படும்.
* 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியே சேனல் தொடங்கப்படும்.
* ஒவ்வொரு வகுப்புக்கும் கல்வி கற்பிக்க தனியாக ஒரு சேனல் தொடங்கப்படும்.

* சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்படும்.
* சிறந்த கல்வி நிறுவனங்கள் கொண்டு மே 30- முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
* டிடிஎச்சில் மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப டாடா ஸ்கை, ஏர்டெல உடன் ஒப்பந்தம்.

* 2025-க்குள் அனைத்து குழந்தைகளும் 5-ம் வகுப்பு வரை படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம்
* மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.
* கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 இ-புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வாய்ப்பு ஏற்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றார்.

* மாநிலங்களுக்கு ரூ.4,113 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
* நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் கூடுதல் கடன் பெற வாய்ப்பு.
* புதிய கடன் அளவில் மூலம் மாநிலங்களுக்கு 4.28 லட்சம் கோடி நிதி கிடைக்கும்.
* மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி 60 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்வு.
* மாநில அரசுகளை போலவே மத்திய அரசுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
* நெருக்கடி நிலையிலும் மாநில அரசுகளுக்கு போதிய உதவியை மத்திய அரசு செய்கிறது.

* நிதிநிலையில் அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.46,038 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* உயர்த்தப்பட்ட புதிய கடன் அளவு 2020-2021 நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

* ஒரு தேசம், ஒரு ரேசன் அட்டை உள்ளிட்ட 4 நிபந்தனைகளுடன் கடன் அளவை உயர்த்த அனுமதி.
* சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிரித்து மற்றவற்றில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி.
* தனியார் முதலீட்டிற்கு அனுமதியில்லாத பொதுத்துறை நிறுவனங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

* பொருளாதார துறையில் இந்தியா மிக சிக்கலான ஒருக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.
* இந்தியா நெருக்கடியான நிலையில் இருப்பதை பிரதமர் ஏற்கனவே தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
* சர்வேதேச அளவிலான இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்.
* தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம், சட்டம் தொடர்பான அறிப்பை வெளியிட்டுள்ளோம்.
* நெருக்கடியான சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனையால் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.

* 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கின் 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
* 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
* 2.2 கோடி தொழிலாளர்களுக்கு 3950 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, நேரடியாக தலா ரூ.2000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

* புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது.
* ரயில் கட்டணத்தில் மீதம் 15% தொகையை மாநில அரசு வழங்கியது.

* 12 லட்சம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெற்றுள்ளனர்.
* வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.3600 கோடி எடுக்கப்பட்டுள்ளது.

* சுகாதாரத்துறைக்கு ரூ.15,000 கோடி நிதியை பிரதமர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.
* உஜ்வாலா திட்டத்தின் மூலம் 6.81 கோடி மானியமில்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

* பரிசோதனை மையங்கள் அமைக்க ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
* அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
* போக்குவரத்து தட்டுப்பாடு உள்ள நிலையிலும் 3 மாதங்களுக்கு தேவையான பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

* PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
* ஊரடங்கில் இந்திய உணவுக்கழகம், வேளாண் கூட்றவு சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன.
* நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள மக்களின் தேவைகளையும் அரசு நிறைவேற்றுகிறது.

* மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

* மாநிலங்களுக்குரூ.4,113 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
* அதிக உற்பத்தி மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு
* 11.08 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* திவால் சட்டத்தின் கீழ், சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம்.
* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு விவரம்:

முதல் நாள்: 5,94,550 கோடி
2-ம் நாள்: 3,10,000 கோடி
3-ம் நாள்: 1,50,000 கோடி
4 மற்றும் 5-ம் நாள்: 48,100 கோடி

மொத்தம் : 11,02,650 கோடி

முந்தைய நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றிக்கு (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா) 1,92,800 கோடி
ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் 8,01,603 கோடி
மொத்தம்: 9,94,403 கோடி

ஆக மொத்தம் தொகை: 20,97,053 லட்சம் கோடி
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad