காஷ்மீரில் புதிய பயங்கரவாத அமைப்பை தொடங்கிய பாகிஸ்தான்; ஜப்பானில் கடும் நிலநடுக்கம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

காஷ்மீரில் புதிய பயங்கரவாத அமைப்பை தொடங்கிய பாகிஸ்தான்
கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒரு புதிய பயங்கரவாத குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  முன்வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  மூன்று உயர் தலைவர்களால் இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது  என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாராளுமன்றம் ரத்து செய்து, மாநிலத்தை மத்திய அரசே  நிர்வகிக்கும் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தது. அதன் பின்னர் இந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது

தெற்கு காஷ்மீருக்கான சஜாத் ஜாட், மத்திய காஷ்மீருக்கு காலித் மற்றும் வடக்கு காஷ்மீருக்கு ஹன்சலா அட்னான் இவர்களால் இந்த அமைப்பு நடத்தப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், உள்ளூர் ஆட்களை ஈர்ப்பதற்காக  தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஒரு வல்லமைமிக்க குழுவாக  அமைக்க திட்டமிடப்பட்டது. ஏப்ரல் தொடக்கத்தில் கெரான் பகுதியில்  ஐந்து பயங்கரவாதிகள் மற்றும் சம எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானில் உள்ள தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  சமூக ஊடக மேலாளர்கள் பொறுப்பேற்றனர்.

இந்த வார இறுதியில் ஹண்ட்வாராவில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் பொறுப்பையும் இந்தக் குழு ஏற்றுக்கொண்டது. இந்த சண்டையில் பாதுகாப்புப் படையின் ஒரு இராணுவ கர்னல் உட்பட ஐந்து உயிர்களை இழக்க நேரிட்டது.

இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவரான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர் தளபதி ஹைதர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். மற்றவர் உள்ளூர் பயங்கரவாதி, ஹண்ட்வாராவில் வசிப்பவர்.

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
ஜப்பானின் ஐசூ தீவு பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

ஈராக்கில் நீண்டநாட்களுக்கு பின் புதிய பிரதமர் பதவி ஏற்பு
ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்தார். ஆனால் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து, உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முஸ்தபா அல் காதிமி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஈராக்கின் புதிய பிரதமர் பதவி ஏற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் முஸ்தபா அல் காதிமி தலைமையில் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 255 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் முஸ்தபா அல் காதிமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனை தொடர்ந்து ஈராக்கின் பிரதமராக முஸ்தபா அல் காதிமி அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். மேலும் அவரது தலைமையிலான மந்திரி சபையில் 15 மந்திரிகள் பதவி ஏற்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad