சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டம் குறித்து 4வது நாளாக விளக்கம் அளித்தார். அப்போது
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர 3 ஆண்டுகளுக்கு முன்பே மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகிறது.
நேரடி பணமாக மானியம் வழங்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது. எளிதில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுக்கு இன்றைய அறிவிப்புகளில் முக்கியத்துவம்.
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது; பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது.
இந்திய உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகளும் அதிக உள்ளன.உலக அளவில் கடினமான போட்டிகளை எதிர்கொள்ள இந்திய தொழில்துறை தயாராக வேண்டியது முக்கியம்.
முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்படும் ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும்.
திட்டஙளை அடையாளம் கண்டு முதலீட்டாளர்கள், மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் பணியில் திட்ட மேம்பாட்டு பரிவு ஈடுபடும். முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும் என கூறினார்
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர் கூறியதாவது;
* பிரதமர் கூறிய ''சுயசார்பு இந்தியா'' சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்.
* தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.
* உலக அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்த சவால்களை சந்திக்க நேரிடும்.
* ஜிஎஸ்டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார்.
* நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை.
* நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
* முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டு மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
* சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல. சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது. போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி.
* ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
* மத்திய, மாநில அரசுகள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சிறப்பு பிரிவு.

* அதிகாரம் அளிக்கப்பட செயலாளர் குழு மூலம் முதலீடுகளுக்கு விரைவாக அனுமதி வழங்கப்படும்.
* நேரடி பணமாக மானியம் வழங்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது.
* எளிதில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
* இன்றைய அறிவிப்புகளில் உற்பத்தி, வேலை வாய்ப்பை அதிகரிக்க முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
* கொரோனா காரணமாக பட்ஜெட் தாக்கலாகி நீண்ட காலம் ஆனது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
* தொழில்துறை உட்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்படும்.
* இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர 3 ஆண்டுகளுக்கு முன்பே மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகிறது.
* நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க 5 லட்சம் ஹெக்டேர் இடம் தேர்வு. நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
* நிலக்கரி, கனிமம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைகளில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும்.
* நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
* 8 முக்கியத் துறைகளில் தொழில்துறை கொள்கை ரீதியிலான சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
* ஒவ்வொரு அமைச்சகத்திலும் இனி ''திட்ட மேம்பாட்டு பிரிவு'' புதிதாக உருவாக்கப்படும்.
* தொழில் துறையை எளிமைப்படுத்துவதன் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
* நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம். நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* 50 நிலக்கரி படுகைகளில் மீத்தேன் எடுக்கும் உரிமை ஏலம் விடப்படும்.
* நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே உற்பத்தி இலக்கை எட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை.
* ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும்.
* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
* சில பாதுகாப்பு தளவாடங்கள் மட்டும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்.
* பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% வரை அதிகரிப்பு.
* பயன்படுத்தாமல் உபரியாக உள்ள கனிம வளங்களை விற்பனை செய்ய அனுமதி.
* நிலக்கரி சுரங்கங்களை ஏலம் பெற இனி எந்த முன் தகுதியும் தேவையில்லை.
* ஒவ்வொரு கனிமத்தின் இருப்பைக் குறிப்பிட கனிமவளக் குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* பாதுகாப்புத்துறையிலும் தற்சார்பு அடைய வேண்டியது அவசியம்.
* சில குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
* பெரும்பான்மையான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கவனம் செலுத்தப்படும்.
* ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை இணைத்து தனி அமைப்பு உருவாக்கப்படும்.
* சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ரூ.1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை.
* தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* சில வெடிபொருள் தொழிற்சாலைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
* பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவன மயமாக்கப்படும், தனியார் மயம் அல்ல.
* சாதாரண குடிமகனும் வெடிபொருள் தொழிற்சாலை சார்ந்த பங்குகளை வாங்க முடியும்
* ஆயுதங்களை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவுகள் இனி மிச்சமாகும்.
* நாடு முழுவதும் மேலும் 6 விமான நிலைய நிர்வாகத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
* விமானங்களின் வான்வெளி பயன்பாட்டில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும். வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்.
* விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்.