ரசிகர்கள் இல்லையெனில் மேஜிக் காணாமல் போகும்: விராட் கோலி; பார்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹைடன்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
ரசிகர்கள் இல்லையெனில் மேஜிக் காணாமல் போகும்: விராட் கோலிரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடக்குமானால் மேஜிக் தருணங்கள் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் கனக்டெட் என்ற நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, தற்போதைய சூழலில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது சாத்தியம் தான் என்றும் இதனை வீரர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என தெரியவில்லை என்றும் கூறினார்.
தன்னை போன்ற வீரர்கள் பலருக்கும் ரசிகர்களின் மத்தியிலே கிரிக்கெட் விளையாடி பழகிவிட்டதாக தெரிவித்த விராட் கோலி, அது ஒரு அலாதியான இன்பம் என்றார்.
கூச்சல், உற்சாகம், பதைபதைப்பு போன்ற உணர்வுகள் எதுவும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிடைக்காது என்றும் விராட் கோலி குறிப்பிட்டார்.
பார்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹைடன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியின் போது கேலி செய்ததால் கோபமடைந்த மேத்யூவ் ஹெய்டன் தன்னை மிரட்டியது குறித்து பார்த்திவ் படேல் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் உள்ளூர் போட்டிகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய இந்திய வீரர்கள் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர்.
இந்திய வீரர் பார்த்திவ் படேல் ஹெய்டன் உடனான மோதல் குறித்து தற்போது பேசி உள்ளார். அப்போது, “நான் பிரிஸ்பன் போட்டியில் குளிர்பானங்களை எடுத்துச் சென்றேன். அந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஹெய்டன் இர்ஃபான் பதான் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திருப்பி கொண்டிருந்தார்.
அப்போது நான் அவரை தாண்டி செல்லும் போது ஹூ ஹூ என்று சத்தம் எழுப்பி கேலி செய்தேன். அவர் என் மீது கடும் கோபத்தில் இருந்தார். நான் மீண்டும் டிரெஸ்ஸிங் ரூம்மிற்கு செல்லும் போது வாசலில் நின்றிருந்த ஹெய்டன் என்னை நோக்கி, இன்னொரு தடவை இப்படி நடந்து கொண்டால் செஞ்ச மூஞ்சில ஒங்கி குத்திடுவேன் என்றார்.
நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் பதில் கூறாமல் சென்று விட்டார். அப்போது என்னை அடிக்க பார்த்தார், ஆனால் அதன் பிறகு சிஎஸ்கே அணியில் சிறந்த நண்பர்களாக மாறி விட்டோம்'' என்றார் படேல்.