ஊரடங்கு முடியும் வரை சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 31-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகபட்சமாக 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. தினந்தோறும் ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளி மற்றும் சாலை வாசிகள் என பலரும் அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது வேலையில்லாமல் உணவுக்காக திண்டாடி வரும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் உத்தரவின் பேரில் சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி அறிவித்தார். ஏற்கனவே சேலம், புதுக்கோட்டை, திருவரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்களில் கட்டணம் வாங்குவது மக்களுக்கு மிகவும் மேலும் கஷடத்தை கொடுக்கும் என்பதால் ஊரடங்கு காலகட்டத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்பேரில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.